ஹோட்டலில் வாங்கிய உணவில் இறந்த எலி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி..

ஹோட்டலில் வாங்கிய உணவில் இறந்த எலி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Mumbai news : Dead rat found in food at famous restaurant

மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் தான் வாங்கிய சிக்கன் கிரேவியில் இறந்த எலி இருப்பதைக் கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். அனுராக் சிங் என்பவர் பாந்த்ராவின் பாலி ஹில்லில் உள்ள ஒரு உணவகத்திற்கு தனது நண்பருடன் உணவு சாப்பிட சென்றுள்ளார். அவர்கள் ரொட்டியுடன் சிக்கன் மற்றும் மட்டன் உணவு வகைகளை ஆர்டர் செய்துள்ளனர்.  தாங்கள் ஆர்டர் செய்த உணவுகள் வந்த உடன் அதை சாப்பிட தொடங்கி உள்ளனர்.

எனினும் அதை சாப்பிடும் போது உணவின் சுவை சற்று வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தனர். அதில் உற்றுபார்த்த போது இறந்த எலி ஒன்று கிடந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் 
இது குறித்து இதுகுறித்து உணவக மேலாளரிடம் சிங் கேட்டபோது, அவர் மழுப்பலாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.

Latest Videos

இதையடுத்து பாந்த்ரா காவல் நிலையத்தில் அனுராக் சிங் புகார் அளித்தார். புகாரின் பேரில், உணவக மேலாளர் விவியன் ஆல்பர்ட் ஷிகாவர், அப்போது ஓட்டலில் இருந்த சமையல்காரர், சிக்கன் சப்ளையர் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் சிக்கனில் இறந்த எலி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image