கோழிக்கோடு விமான விபத்துக்கு இதுதான் காரணமா..? வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!

By Thiraviaraj RMFirst Published Aug 8, 2020, 8:26 AM IST
Highlights

கோழிக்கோடு விமான விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
 

கோழிக்கோடு விமான விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

174 பயணிகள், 10 குழந்தைகள், 2 விமானிகள், 6 சிப்பந்திகள் என மொத்தம் 191 பேருடன் துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த விமானம் விபத்துக்குள்ளானது. கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய போது, ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் 2 துண்டுகளாக உடைந்த விமானம் பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விமானம் வெளிநாட்டில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க, வந்தே பாரத் திட்டத்திற்காக அனுப்பட்டது. இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் விமானி, துணை விமானி உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பலி எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. எனினும் காயமடைந்தவர்கள் அல்லது உயிரிழந்தவர்களின் விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. 

இந்நிலையில் இந்த விபத்திற்கு 2 காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால், நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, விமானம் நிலை தடுமாறி கீழே விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மற்றொன்று, கோழிக்கோடு விமான நிலையத்தின் வடிவமைப்பு, அதன் ஓடுபாதை நீளம் என கூறப்படுகிறது. கோழிக்கோடு விமானநிலையம் மலை மீது அமைந்துள்ளதால் அது Tabletop airport என்று அழைக்கப்படுகிறது. அதாவது மலை மீதோ அல்லது உயரமான இடத்தின் மீதோ அமைக்கப்பட்டிருக்கும் ஓடுப்பாதை ஆகும்.

உயரமான மலை மீது விமான நிலையம் இருப்பதால், பொதுவாக இங்கு விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம். கேரளாவில் டேபிள் டாப் ரன்வே கொண்ட ஒரே விமானம் கோழிக்கோடு தான். பொதுவாக 3150 கி.மீ தூரத்திற்கு ரன்வே இருந்தால், அங்கு விமானம் தரையிறக்குவது கடினம். கோழிக்கோடு விமான நிலையத்தின் ரன்வே நீளம் 2850 மீட்டர் தான் என்பதால் அங்கு விமானங்களை இயக்குவது கடினமான ஒன்று. எனவே இதுவும் இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

click me!