ஏர் இந்தியா விமானம் கோர விபத்து: கேரள முதல்வருடன் பிரதமர் மோடி பேச்சு.. அமித் ஷா அதிரடி உத்தரவு

Published : Aug 07, 2020, 10:12 PM ISTUpdated : Aug 07, 2020, 10:17 PM IST
ஏர் இந்தியா விமானம் கோர விபத்து: கேரள முதல்வருடன் பிரதமர் மோடி பேச்சு.. அமித் ஷா அதிரடி உத்தரவு

சுருக்கம்

கேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது நிலைதடுமாறி விமானம் இரண்டாக உடைந்து கோர விபத்துக்குள்ளான நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனை தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.   

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சொந்த ஊருக்கு அழைத்துவரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேருடன் கேரளாவிற்கு வந்தது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்(IX 1344). கோழிக்கோடு அருகேயுள்ள காரிப்பூர் விமான நிலையத்தில் இன்று இரவு 7.40 மணிக்கு தரையிறங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பயணிகள் இந்த விமானத்தில் வந்தனர்.

கேரளாவில் மழை பெய்துவரும் நிலையில், தரையிறங்கும்போது 35 அடியிலிருந்து விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளிவந்துள்ளது. மழை காரணமாகத்தான் விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என தெரிகிறது. ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்புப்படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், தேசிய பேரிடம் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். ஒரு விமானி உட்பட 6 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய 2 மாவட்ட ஆட்சியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணிகளை ஒருங்கிணைத்துவருகின்றனர். நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்து குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி விசாரித்துள்ளார். 

உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமான விபத்து சம்பவத்தை அறிந்து தனது மனது கடும் வேதனையடைந்ததாகவும் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு விரைந்து செயல்பட உத்தரவிட்டுள்ளதாகவும் டுவீட் செய்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

ராகுல் பற்றி சோனியா காந்தியிடம் புகார்.. முன்னாள் காங். எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்!
இந்தியாவுக்கு மீண்டும் வருவேன்! கால்பந்து ரசிகர்களுக்கு மெஸ்ஸி சொன்ன குட்நியூஸ்!