RAW உளவு அமைப்பின் புதிய தலைவராக ஐபிஎஸ் அதிகாரி ரவி சின்ஹா நியமனம்!

By SG Balan  |  First Published Jun 19, 2023, 7:44 PM IST

​​டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் முன்னாள் மாணவரான சின்ஹா உளவுத்துறையில் தனது தொழில்முறை திறமைக்காக பரவலாக மதிக்கப்படுபவர்.


மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரவி சின்ஹா ​​திங்கட்கிழமை இந்தியாவின் முக்கிய புலனாய்வு அமைப்பான RAW க்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என மத்திய அமைச்சரவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் கேடரில் 1988 பேட்ச்சில் தேர்ச்சி பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான ரவி சின்ஹா, தற்போது அமைச்சரவை செயலகத்தின் சிறப்பு செயலாளராக பணியாற்றுகிறார். இவரை ரா (RAW) எனப்படும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் புதிய தலைவராக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Tap to resize

Latest Videos

கல்லூரியில் சேரமுடியாமல் தவித்த ஏழை மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய அமைச்சர்! சு.வெங்கடேசன் பாராட்டு!

ஜூன் 30ஆம் தேதி தனது பதவிக்காலத்தை முடிக்கும் சமந்த் குமார் கோயலுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ள ரவி சின்ஹா இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ரா அமைப்பின் தலைவராக செயல்படுவார்.

ஒரே மொபைலில் பல அக்கவுண்ட்! வாட்ஸ்அப்பில் விரைவில் வருகிறது புதிய அப்டேட்

யார் இந்த ரவி சின்ஹா ஐபிஎஸ்?

​​டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் முன்னாள் மாணவரான சின்ஹா உளவுத்துறையில் தனது தொழில்முறை திறமைக்காக பரவலாக மதிக்கப்படுபவர். அவர் பல துறைகளில் பணியாற்றியுள்ள இவர் உளவுத்துறையில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்திய பெருமைக்கும் உரியவர். இதனால், ரா அமைப்பின் தலைவராக புதிய பணியை மேற்கொள்ள அவர் நல்ல அனுபவவும் அறிவும் கொண்டவராகக் கருதப்படுகிறார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். தொழில்நுட்பம் மற்றும் மனித நுண்ணறிவு பரிமாணங்களை ஒருங்கிணைக்க இந்த அனுபவம் உதவுகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

மொபைல் பயன்படுத்துவதைத் தடுத்த தாய்... பழி வாங்க திட்டம் போட்ட சிறுமியின் விபரீதச் செயல்!

click me!