மகிழ்ச்சி செய்தி!! இனி ஐ.ஐ.டிக்களில் பி.எட்., படிப்பு அறிமுகம்.. மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Jun 15, 2022, 11:55 AM IST
Highlights

தேசிய உயர் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களான ஐ.ஐ.டி.,க்களில், இனி ஆசிரியர்களுக்கான பி.எட்., படிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
 

தேசிய உயர் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களான ஐ.ஐ.டி.,க்களில், இனி ஆசிரியர்களுக்கான பி.எட்., படிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 700 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றிற்கு தமிழக ஆசிரியர் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகங்களில் இணைப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த கல்லூரிகளில் பி. எட்., மற்றும் எம்.எட்., படிப்புகள் நடத்தப்படுகின்றன. 

இந்நிலையில், பெரும்பாலான கல்வியியல் கல்லுாரிகளில் பி.எட்., படிப்புகளின் தரம் கேள்விக் குறியாகி உள்ளது. ஏனெனில் மாணவர்களுக்கு நேரடி வகுப்பில் பங்கேற்பதில் இருந்து சலுகை வழங்கப்படுகிறது. மேலும் பி.எட்., கல்லூரிகளும், பல்கலைகழகங்களும் தேசிய தர வரிசையில் பின்தங்கிய நிலையில் உள்ளன. அதுமட்டுமல்லாமல் பல கல்வியியல் கல்லுாரிகளில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த தகுதியான பேராசிரியர்கள், முதல்வர்கள் இல்லை என்று குற்றச்சாட்டுக்ளும் எழுந்துள்ளன. 

இது போன்ற குற்றச்சாட்டுகளை களையும் வகையில் மத்திய அரசு அதிரடி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி,  உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.,க்களில், பி.எட்., படிப்பு நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் சில ஐ.ஐ.டி.,க்களில் பி.எட்., சேர்க்கை நடத்தப்படும் என்றும், வரும் ஆண்டில் அனைத்து ஐ.ஐ.டி.,க் களிலும் பி.எட்., சேர்க்கை நடத்தப்படும் என்றும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.  ஐ.ஐ.டி.,யில் தரமான மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பி.எட்., படிப்பை மேற்கொள்ளலாம் என்று பட்டதாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: மாணவர்கள் கவனத்திற்கு!! பள்ளிகளில் முழு பாடத் திட்டம் அமல்.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..

click me!