INS Vindhyagiri : ப்ராஜெக்ட் 17A.. அதிநவீன போர்க்கப்பல்.. அறிமுகம் செய்த ஜனாதிபதி திரௌபதி முர்மு - முழு விவரம்

Ansgar R |  
Published : Aug 18, 2023, 09:34 AM IST
INS Vindhyagiri : ப்ராஜெக்ட் 17A.. அதிநவீன போர்க்கப்பல்.. அறிமுகம் செய்த ஜனாதிபதி திரௌபதி முர்மு - முழு விவரம்

சுருக்கம்

கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி ஆற்றங்கரையில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் (GRSE - Garden Reach Shipbuilders அண்ட் Engineers Limited) நிறுவனத்தில், ஐஎன்எஸ் விந்தியகிரி என்ற அதிநவீன ஸ்டெல்த் போர் கப்பலை ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று வியாழக்கிழமை அன்று  அறிமுகப்படுத்தினார்.

மேலும் இந்த போர் கப்பல் வெளியீட்டு விழாவில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் எஸ்சிவி ஆனந்த போஸ், கடற்படைத் தலைமை அட்மிரல் ஆர் ஹரி குமார் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. INS விந்தியகிரி என்பது GRSEன் ப்ராஜெக்ட் 17A-ன் கீழ் கட்டப்பட்ட ஆறாவது ஸ்டெல்த் போர்க் கப்பலாகும்.

இந்த அறிமுக நிகழ்விற்கு பிறகு, ஐஎன்எஸ் விந்தியகிரி அதன் இரண்டு சக கப்பல்களுடன் GRSE இல் உள்ள அவுட்ஃபிட்டிங் ஜெட்டியில் இணைகிறது, மீதமுள்ள செயல்பாடுகள் மற்றும் உபகரண சோதனைகளில் முன்னேற்றம் அடைந்த பிறகு, அவற்றின் விநியோகம் மற்றும் செயல்பாடு குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

இணையத்தில் கசிந்த பீகார் பாஜக பெண் எம்.எல்.ஏ.வின் மார்பிங் செய்யப்பட்ட படங்கள்!

ப்ராஜெக்ட் 17A ஃபிரிகேட்ஸ் என்பது ப்ராஜெக்ட் 17 (ஷிவாலிக் கிளாஸ்) ஃபிரிகேட்களின் ஃபாலோ-ஆன் கிளாஸ் ஆகும், மேம்படுத்தப்பட்ட ஸ்டெலத் அம்சங்கள், மேம்பட்ட ஆயுதங்கள் & சென்சார்கள் மற்றும் இயங்குதள மேலாண்மை அமைப்புகளுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, ஐஎன்எஸ் விந்தியகிரியின் ஏவுகணை, இந்தியாவில் பாதுகாப்பு தொழில்துறை தளத்தை அதிகரிக்கும் என்றும், அதே போல வெளிநாட்டு சப்ளையர்களை, இந்தியா சார்ந்திருப்பதை இது குறைக்கும் என்றும் கூறியுள்ளார்கள். மேலும் இந்த புதிய போர்க்கப்பல் இந்தியாவின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையிலும் வலுவான பாதுகாப்பு தொழில்துறை தளத்தை அமைக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த போர்க்கப்பல் தயாரிப்பு நிறுவனம், இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படைக்காக உருவாக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட மூன்றாவது மற்றும் கடைசி ஸ்டெலத் போர் கப்பல் இதுவாகும். 

இந்த அறிமுக நிகழ்வின் போது, ​​ஜனாதிபதி திரௌபதி முர்மு, விந்தியகிரியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், மேலும் ஐஎன்எஸ் விந்தியகிரி வலிமைமிக்க ஹூக்ளியின் நீரை முதன்முறையாகத் தொடும் போது, ​​அது பெயரிடப்பட்ட மலைகளில் இருந்து வலிமையைப் பெறுகிறதுஏ என்றும் கூறினார்.

2024 மக்களவை தேர்தலில் மோடி மேஜிக் வெல்லுமா? கருத்துக்கணிப்பு முடிவுகள் என்ன சொல்கின்றன?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!