
இண்டிகோ விமான கேப்டனான அந்த இந்தியர், நாக்பூரிலிருந்து புனேவுக்கு விமானத்தை இயக்கவிருந்த நிலையில், அவர் போர்டிங் கேட்டை அடைந்த நிலையில் சுயநினைவை இழந்து கீழே விழுந்துள்ளார். உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணி முதல் 7 மணி வரை திருவனந்தபுரத்தில் இருந்து நாக்பூர் வழியாக புனே வரை அண்ட் பைலட் இரண்டு விமானங்களை இயக்கியதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு 27 மணி நேரம் ஓய்வில் இருந்த அவர் நேற்று தனது அடுத்த பயணத்திற்கு ஆயத்தமாகி வந்தார். இந்த சூழலில் தான் மதியம் 1 மணிக்குத் திட்டமிடப்பட்டிருந்த அன்றைய முதல் பயணத்திற்காக அவர் புறப்பட்டபோது மயங்கி விழுந்து இறந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
பெண் எம்.பியை வசைபாடிய ரவீந்திர ஜடேஜா மனைவி: குஜராத்தில் பாஜகவில் சலசலப்பு!
இண்டிகோ நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று அதிகாலை நாக்பூரில் எங்கள் விமானி ஒருவர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. அவர் நாக்பூர் விமான நிலையத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் துரதிர்ஷ்டவசமாக இறந்தார். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன" என்று கூறியுள்ளது.
அதேபோல கத்தார் ஏர்வேஸ் விமானியான அந்த இந்திய விமானி நேற்று முன்தினம் டெல்லி-தோஹா விமானத்தின் பயணிகள் அறையில் கூடுதல் பணியாளராகப் பயணம் செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் இதற்கு முன்பு ஸ்பைஸ்ஜெட், அலையன்ஸ் ஏர் மற்றும் சஹாரா நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் இந்த இரு இறப்புகளை உறுதி செய்துள்ளது. கடந்த வாரம் மியாமியில் இருந்து சிலிக்கு 271 பயணிகளுடன் சென்ற வணிக விமானத்தின் குளியலறையில் விமானி ஒருவர் மயங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது.
ஓணம் பண்டிகை சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு - நாளை முன்பதிவு!