இந்திய - மியான்மர் எல்லை.. மறைந்திருந்து தாக்கிய குல்கி போராளிகள்.. SDPO அதிகாரி கொல்லப்பட்ட கொடூரம்!

Ansgar R |  
Published : Oct 31, 2023, 10:45 PM ISTUpdated : Oct 31, 2023, 11:52 PM IST
இந்திய - மியான்மர் எல்லை.. மறைந்திருந்து தாக்கிய குல்கி போராளிகள்.. SDPO அதிகாரி கொல்லப்பட்ட கொடூரம்!

சுருக்கம்

இந்திய மியான்மர் எல்லையில் குல்கி போராளிகள் நடத்திய தாக்குதலில் SDPO அதிகாரி கொல்லப்பட்டுள்ளார். மோரே சப்-டிவிசனல் போலீஸ் அதிகாரி (SDPO) சிங்தம் ஆனந்த், இந்திய மியான்மார் எல்லை உள்ள புதிதாக கட்டப்பட்ட ஹெலிபேடை ஆய்வு செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது.

குண்டடிபட்டு SDPO, மோரேயில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை செய்ய துவங்கினர். அவர் சிகிச்சை பலனின்றி அந்த அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இந்த நாச வேலைக்கு காரணமான தீவிரவாதிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங், ஆனந்தின் இந்த கொடூர கொலை வருத்தமளிப்பதாகக் கூறினார். PTI அளித்த தகவலின்படி, பல சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், குறிப்பாக மோரேவை தளமாகக் கொண்டவர்கள், எல்லை நகரத்திலிருந்து அரச படைகளை அகற்றக் கோரிய சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் ஒரு SDPO அதிகாரி உயிரிழந்த நிலையில், 2 காவலர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 

கான்பூரில் 17 வயது சிறுவன் கொலை.. ஆசிரியையின் காதலன் செய்த வெறிச்செயல் - தவறை மறைக்க நடந்த பலே வேலை!

என்ன நடந்தது?

இன்று மாலை 3 மணியளவில் மோரேவிலிருந்து சுமார் 14 கிமீ தொலைவில் உள்ள தென்னௌபல் மாவட்டத்தில் உள்ள சினம் என்ற கிராமத்தில் மேற்பார்வை பணிக்காக கான்வாய் சென்றபோது, பதுங்கியிருந்த போராளிகள் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

முன்னதாக, நகரத்தில் புதிதாக கட்டப்பட்ட ஹெலிபேடை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ​​சந்தேகப்படும்படியான துப்பாக்கி சுடும் வீரரால் sdpo கொல்லப்பட்டதை அடுத்து, அவசர அமைச்சரவைக் கூட்டம் இம்பாலில் நடைபெற்றது. அந்த SDPO அதிகாரி வயிற்றில் சுடப்பட்ட நிலையில் அவர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயுதம் ஏந்திய குல்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இம்பாலில் உள்ள ஹாபாம் மரக் சிங்தாம் லைகையில் வசிக்கும் குமார் கொல்லப்பட்டதாக அமைச்சரவை குறிப்பிட்டுள்ளதாக அரசு அறிக்கை தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

இறந்த குமார், சிறப்புப் பகுதியில் சிறப்புப் பணியாற்றியதை கருத்தில் கொண்டு, 50 லட்சம் ரூபாயை அமைச்சரவை அங்கீகரித்து, கருணைத் தொகையாக அவரது குடும்பத்திற்கு வழங்கியுள்ளது. இறந்த காவல்துறை அதிகாரியின் குடும்பத்தில் உள்ள தகுதி உள்ள நபருக்கு அரசருக்கு பொருத்தமான அரசு வேலை வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

குற்றத்திற்கு காரணமான குற்றவாளிகளைப் பிடிக்க மோரே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூட்டு நடவடிக்கையைத் தொடங்கவும், குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை அதைத் தொடரவும் அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளது. இதற்காக இம்பாலில் இருந்து கூடுதல் மாநிலப் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்.. வீடு புகுந்து காவலர் சுட்டுக்கொலை - அதிகரிக்கும் தீவிரவாதிகளின் அட்டகாசம்!

PREV
click me!

Recommended Stories

நேரு சொன்னதைத் திரிக்கும் மோடி.. வந்தே மாதரம் விவாதத்தில் பிச்சு உதறிய பிரியங்கா காந்தி!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!