என் ஒடம்பு முழுக்க பாம் கட்டிவிடுங்க அங்கிள், நான் போயி குதிக்கிறேன் பாகிஸ்தானுக்குள்ள!: நாடி நரம்பெல்லாம் வெறி ஏறி நிற்கும் இந்தியா, மிரண்டு கிடக்கும் பாகிஸ்தான்.

By Vishnu PriyaFirst Published Feb 16, 2019, 7:25 PM IST
Highlights

மும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும், ஆத்திரத்தின் உச்சத்திலும் போய் நின்றதோ அதை விட நூறு மடங்கு கொதிநிலை இப்போது இந்தியா முழுவதும் நிலவுகிறது என்று மத்திய உளவுத்துறை, உள்துறை அமைச்சகத்துக்கு நோட் வைத்துள்ளது. 

மும்பை தாக்குதலின் போது எந்தளவுக்கு தேசம் கண்ணீர் கடலிலும், ஆத்திரத்தின் உச்சத்திலும் போய் நின்றதோ அதை விட நூறு மடங்கு கொதிநிலை இப்போது இந்தியா முழுவதும் நிலவுகிறது என்று மத்திய உளவுத்துறை, உள்துறை அமைச்சகத்துக்கு நோட் வைத்துள்ளது. 

ஜம்மு - காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதியன்று சி.ஆர்.பி.எப். வீரர்களின் வாகனங்கள் மீது பயங்கரவாதி ஒருவன் நடத்திய தற்கொலை படை தாக்குதலினால் நாற்பது வீரர்கள் உடல் சிதறி பலியாகினர், பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்திய தேசத்தையே உலுக்கி, சர்வதேசத்தின் இரங்கலையும் சம்பாதித்துள்ளது இந்த சம்பவம். பல தேசத்து தலைவர்களும் இந்த பயங்கரவாத செயலுக்கு எதிராக கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். 

கண்டனத்தின் உச்சம் சென்ற அமெரிக்காவோ...’பயங்கரவாத அமைப்புகளுக்கு அளித்து வரும் ஆதரவையும், புகலிடம் வழங்குவதையும் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.’ என்று வெளிப்படையாகவே அந்த நாட்டை எச்சரித்து, சர்வதேச சமூகத்தின் முன் அசிங்கப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி ’நம் நாட்டு மக்களின் ரத்தம் கொதிக்கிறது.’ என்று கண் சிவக்க கர்ஜித்துள்ளார். அவர் சொன்னதன் உள் அர்த்தம் உண்மையே. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தேசம் முழுக்க மிக கடுமையான ஆதங்க அலை உருவாகி இருக்கிறது. இறந்த 40 பேருக்காக அஞ்சலி செலுத்தும் மக்கள், ‘இதுக்கு அவனுங்களை பழிவாங்கியே தீரணும்டா’ என்று கொதிக்கிறார்கள். 

இந்தியர்களை ‘சோஷியல் மீடியா சோம்பேறிகள்’ என்று சர்வதேசமும் கிண்டலடித்து வந்தது. ஆனால் இன்றைக்கு அதே சோஷியல் மீடியா மூலமாகவே தேசமெங்கிலும் மட்டுமில்லாமல் சர்வதேசம் வாழ் இந்தியர்களும் தங்கள் உணர்வுகளைக் கொட்டிக் கொட்டி கொதித்துக் கொண்டு இருக்கின்றனர். 40 வீரர்களுக்கு ஆதரவாக அப்லோட் செய்யப்படும் ஒவ்வொரு போட்டோ மற்றும் வீடியோவின் கீழும் கண்களில் நீர் வழிய, நரம்பு புடைக்க கமெண்டுகள் வந்து விழுகின்றன. 

இதில் பல கமெண்ட்ஸை பார்தால் நமக்கு கண்ணீரை அடக்க முடிவதில்லை. ரத்தமும் சதையுமாக தன் தேசப்பற்றை விளக்கியுள்ளனர் மக்கள். குறிப்பாக நாற்பது வீரர்களுக்கான அஞ்சலி பதிவு ஒன்றில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆட்டிங்கல் பகுதியை சேர்ந்த...நிஷா எனும் பத்து வயது சிறுமி, தன் அப்பாவின் கூகுள் அக்கவுண்ட் வழியே யூடியூப் வீடியோ ஒன்றில் போட்டிருக்கும் கமெண்டில்...

‘என்னால சாப்பிட முடியலை, தூங்க முடியலை அங்கிள். குண்டு வெடிச்சு, உடம்புல தீ பிடிச்சப்ப நாற்பது சோல்ஜர்ஸுக்கும் எப்படி வலிச்சிருக்கும்? என்னால தாங்கிக்க முடியலை. யாராச்சும் என் உடம்பு முழுக்க பாம் கட்டி விடுங்க அங்கிள். நான் அந்த பாகிஸ்தான்ல டெரரிஸ்ட் இருக்குற இடத்துல போயி குதிக்கிறேன்.’ என்று எழுதியுள்ளாள். இந்த கமெண்டை தன் அப்பா, அம்மா இருவரும் உடன் இருக்க, டைப் செய்ததாக குறிப்பிட்டுள்ளாள். தான்  வீட்டில் ஒரே பிள்ளை, அதுவும் செல்லப்பிள்ளை என்றும் குறிப்பிட்டுள்ளாள் ஆங்கிலத்தில். 

இந்த பதிவு, வாசிப்பவர்கள் அத்தனை பேரின் ரத்தத்தையும் சூடேற்றி...’என்னை அனுப்புங்க தற்கொலை  வீரனா, என் மகனை நான் அனுப்புறேன், தன்னோட உடம்புல குண்டு கட்டிவிட சொல்லி எங்க பாட்டி அழுது சார்!’ என்று பலர் பல மாநிலங்களிலிருந்தும் அப்லோட் செய்துள்ளனர். இந்தியாவின் நாடி நரம்பு சந்து பொந்தெல்லாம் வெறி பிடித்தாற்போல் ஏறி எகிறி நிற்கும் இந்த வேட்கையை கண்டு பாகிஸ்தான் பதறி நிற்கிறது. வீ ஆர் வெயிட்டிங்டா!

tags
click me!