narendra modi: jagan: adani:பிரதமர் மோடி, கெளதம் அதானி, ஆந்திரா முதல்வர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

Published : Sep 03, 2022, 02:55 PM IST
narendra modi: jagan: adani:பிரதமர் மோடி, கெளதம் அதானி, ஆந்திரா முதல்வர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

சுருக்கம்

பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி, தொழிலதிபர் கெளதம் அதானி ஆகியோர் மீது இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி, தொழிலதிபர் கெளதம் அதானி ஆகியோர் மீது இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஊழல், மற்றும் பெகாசஸ் உளவு மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களைக் குறித்து அந்த மருத்துவர் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Covishield vaccine:கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் உயிரிழப்பு:1000 கோடி இழப்பீடு:சீரம், மத்திய அரசுக்கு நோட்டீஸ்

இந்திய வம்சாவளி மருத்துவர் தொடர்ந்த வழக்கை ஏற்றுக்கொண்ட கொலம்பியா மாவட்ட நீதிமன்றம், பிரதமர் மோடி, ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி, அதானி, உலக பொருளாதார கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் கிளாஸ் ஸ்வாப் உள்ளிட்ட  பலருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் லோகேஷ் வயூரு  இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில் “ பிரதமர் மோடி, ஜெகன்மோகன் ரெட்டி, அதானி ஆகியோர் ஊழலில் ஈடுபட்டுள்ளனர், பெகாசஸ் உளவு மென்பொருளுக்காக ஏராளமான கோடிகள் செலவிடப்பட்டுள்ளன”எனத் தெரிவித்துள்ளார். 

Subramanian Swamy: sitharaman: மோடி படம் இல்லாத ரேஷன் கடை: நிர்மலா சீதாராமனுக்கு சுப்பிரமணியன் சுவாமி கண்டனம்

இந்த வழக்கு கடந்த மே 24ம்தேதி தாக்கல் செய்யப்பட்டது. ஜூலை 22ம்தேதி கொலம்பியா நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்தியாவுக்கு ஆகஸ்ட் 4ம் தேதியும், பொருளாதார வல்லுநர் கிளாஸ் ஸ்வாபுக்கு ஆகஸ்ட் 2ம்தேதியும் சம்மன் வழங்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆகஸ்ட் 19ம்தேதிக்குள் தாக்கல் செய்ய மருத்துவர் வயூருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

நியூயார்க்கில் உள்ள இந்தியஅமெரிக்க அட்டர்னி ஜெனரல் ரவி பத்ரா கூறுகையில் “ இந்த வழக்கிற்கு எந்தவிதமான உயிரும் இல்லை.லோகேஷ் வயூருக்கு ஏராளமான நேரம் வீணாக கழிக்கிறார். அதனால்தான் நீதிமன்றத்தில் முறையற்ற வகையில் பயன்படுத்தி 53 பக்கங்களில் புகார் அளித்து, இந்தியாவின் புகழையும், பெருமையையும் இழிவுபடுத்த திட்டமிட்டார்.

muruga mata: கர்நாடக மாடாதிபதிக்கு ஜாமீன் இல்லாத கைது வாரண்ட்! சொத்து வழக்கில் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

ஏற்கெனவே சோனியா காந்தி, காங்கிரஸுக்கு எதிராக இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்து தோல்வி அடைந்துள்ளன. இதுபோன்ற டாய்லட் பேபர் புகாருக்கு எந்த வழக்கறிஞரும் வாதிடவரமாட்டார். இந்த மனு விசாரணைக்கு வரும் முன்பே காலாவதியாகிவிட்டது” எனத் தெரிவித்தார்
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருத்தப்பட்ட வந்தே மாதரம் தான் தேசப் பிரிவினைக்கு காரணமா? அமித் ஷா பேச்சால் சர்ச்சை
vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!