கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியதால் பக்கவிளைவுகள் ஏற்பட்டு தனது மகள் உயிரிழந்ததற்கு இழப்பீடாக ரூ.1000 கோடி வழங்கக் கோரி ஒருவர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுமும்பை உயர் நீதிமன்றம் சீரம் மருந்து நிறுவனம், பில்கேட்ஸ் அமைப்பு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியதால் பக்கவிளைவுகள் ஏற்பட்டு தனது மகள் உயிரிழந்ததற்கு இழப்பீடாக ரூ.1000 கோடி வழங்கக் கோரி ஒருவர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுமும்பை உயர் நீதிமன்றம் சீரம் மருந்து நிறுவனம், பில்கேட்ஸ் அமைப்பு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த மனுவை திலிப் லுனாவாட் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது “ என்னுடைய மகள் ஸ்நேகா நாசிக்கில் மருத்துவம் படித்து வந்தார். அவருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளன.
மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு கூறியதையடுத்து என்னுடைய மகள் இரு டோஸ்களையும் செலுத்திக்கொண்டார்.
ஆனால், அவருக்கு தடுப்பூசி செலுத்தியபின் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் அவர் கடந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி உயிரிழந்தார். மருத்துவ பணியாளரான எனது மகளை கட்டாயப்படுத்தி, பொய்யான தகவல்களைக்கூறி, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு, எய்ம்ஸ், மகாராஷ்டிரா அரசு,மத்திய அரசு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைத்தன.
தடுப்பூசி செலுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய தடுப்பூசி குழுவை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமைத்தது. அந்தக் குழுவினர் எனது மகளின் மரணத்தை ஆய்வுசெய்து கோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவுகளால்தான் உயிரிழந்தார் என்பதை ஏற்றுக்கொண்டனர்.
ஆதலால் எனது மகளின் மரணத்துக்கு இழப்பீடாக ரூ.1000 கோடியை சீரம் மருந்து நிறுவனம் வழங்கிட வேண்டும். சீரம் மருந்து நிறுவனத்துக்கு பில்கேட்ஸ் அமைப்பு தடுப்பூசி தயாரிக்க நிதியுதவி வழங்கியுள்ளது. மத்தியஅரசு, மகாராஷ்டிரா அரசையும் இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், தடுப்பூசியின் பக்கவிளைவுகளால்தான் உயிரிழந்தவர்கள் குறித்த சரியான புள்ளிவிவரங்களையும், உண்மைகளையும் கூறாமல் மறைக்கும் சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கைஎடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
கடந்த மாதம் 26ம் தேதி இந்த வழக்கில் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி சஞ்சய் வி ஞானபுர்வாலா, நீதபிதி மாதவ் ஜே ஜாம்தர் உத்தரவிட்டு நவம்பர் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்