இந்தியாவை உலகளவில் தலை நிமிர வைத்த இந்திய விஞ்ஞானிகள் !

By Raghupati RFirst Published Aug 6, 2022, 5:53 PM IST
Highlights

உலக அளவில் இந்தியாவை நிமிர வைத்த இந்திய விஞ்ஞானிகளை பற்றி இங்கு காணலாம்.

சிவி ராமன்

சிவி ராமன் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். இவர் 1930ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். சிவி ராமன் தான் அறிவியலில் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் மற்றும் முதல் வெள்ளையர் அல்லாதவர். இசைக்கருவிகளின் ஒலியியல் பற்றி ஆராய்ந்த இவர், முதன்முதலாக இந்திய மத்தளவகை இசைக்கருவிகளான தபலா மற்றும் மிருதங்கங்களின் இசை இயல்பை ஆராய்ந்தார். இவர் கண்டறிந்த ஒளிவிலகல் விளைவு, சிவி ராமன் விளைவு என அழைக்கப்படுகிறது.

விஞ்ஞானி ஆச்சார்ய பிரபுல்ல சந்திர ராய்

பிளேக் நோயால் ஆயிரக் கணக்கில்  மக்கள் மடிந்தபோது  நமது நாட்டை காப்பாற்றியவர் விஞ்ஞானி ஆச்சார்ய பிரபுல்ல சந்திர ராய். 1901-இல் கொல்கத்தாவில் ‘பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் ஃபார்மாசூடிகல்ஸ்’ என்ற நிறுவனத்தை ரூ. 700 முதலீட்டில் துவங்கிவிட்டார். இந்தியாவின் முதல் மருந்து தயாரிப்பு நிறுவனம் இதுவே. அதனால்தான், ‘இந்திய நவீன வேதியியலின் தந்தை’ என்று இவர் போற்றப்படுகிறார்.

1896இல் அவர் வெளியிட்ட பாதரச நைட்ரைடு (Mercurous Nitrite) சேர்மம் தொடர்பான ஆய்வறிக்கை அவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்தது. 1916-இல் தங்கம், பிளாட்டினம், இரிடியம் போன்ற தனிமங்களின் சல்பேட் சேர்மத்தை உருவாக்குவதிலும், அவற்றை மருந்து மூலக்கூறாகப் பயன்படுத்துவதிலும் வெற்றி பெற்றார். இது சரவாங்கி எனப்படும் முடக்குவாதத்துக்கு சிறந்த மருந்து என்றும் கண்டறிந்தார்.

ஹோமி ஜே பாபா

குவாண்டம் கொள்கையில் முக்கிய பங்காற்றியவர் ஹோமி ஜே பாபா. இந்திய அணு ஆற்றல் ஆணையத்தின் முதல் தலைவரும் இவரே ஆவார். இந்திய அணு சக்தியின் தந்தை என போற்றப்பட்டாலும், இந்தியா அணுகுண்டு தயாரிப்பதற்கு எதிராக இருந்தார் என்பதை வெகுசிலரே அறிவர். அதற்கு பதிலாக அணுஉலை தயாரித்தால் நாட்டின் துயரமும், வறுமையும் குறையும் என்றார்.

வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன்

சென்னை தண்டையார்பேட்டையில் பிறந்த வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன், சர்வதேச புகழ்பெற்ற விண்வெளி ஆய்வாளராகவும், ராயல் ஸ்வீடிஸ்அறிவியல் அகாடமியின் இருந்தார். விண்வெளி இயற்பியலாளர் என சர்வதேச அளவில் கூறப்படும் இவர், மிகஎடைகுறைந்த விமானம் மற்றும் படகுகளை வடிவமைத்தவர் ஆவார்.

விஸ்வேஸ்வரய்யா

இந்தியாவின் மிக முக்கியமான பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா ஆவார். மைசூர் திவானாகவும் பணியாற்றியுள்ளார். பாரத ரத்னா விருதுக்கு சொந்தக்காரரான இவர், இந்தியா தொழிற்சாலைகள் மூலமே வளர்ச்சியடைய முடியும் என்றார். தானியங்கி குழாய் அடைப்புகள் மற்றும் தொகுதி பாசன அமைப்பு போன்ற பொறியியல் அற்புதங்களை கண்டறிந்த இவரின் பிறந்தநாளான செப்டம்பர் 15, பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

click me!