பூடானின் உயரிய குடிமகன் விருது - இந்த பெருமையை பெரும் முதல் வெளிநாட்டு அரசாங்கத் தலைவராகிறார் மோடி!

By Ansgar RFirst Published Mar 22, 2024, 4:10 PM IST
Highlights

PM Modi In Bhutan : தற்போது பூட்டான் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய குடிமகன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இமயமலை அருகே நிலவும் மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடியின் பூடான் பயணம் முன்னதாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பூடானுக்கு இன்று மார்ச் 22ம் தேதி வெள்ளிக்கிழமை காலை பூடான் சென்றடைந்தார்.

அந்நாட்டின் பாரோ விமான நிலையத்தில் இந்திய பிரதமரை, பூடான் நாட்டின் பிரதமர் ஷேரிங் டோப்கே வரவேற்றார். வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னர், மோடி மேற்கொள்ளும் கடைசி வெளிநாட்டுப் பயணமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடியின் வருகையை முன்னிட்டு, பூடான் நாடு முழுவதும் அவரை வரவேற்கும் வகையில் போஸ்டர்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. 

24 மாநிலங்கள்.. சென்னையில் உருவாகும் புது வந்தே பாரத் ரயில்கள்.. மணிக்கு 200 கிமீ வேகம்..

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு, பூடான் அரசர், "ட்ருக் கியால்போ" என்ற விருதை வழங்கியுள்ளார். 
தரவரிசை மற்றும் முன்னுரிமையின்படி, ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் கியால்போ வாழ்நாள் சாதனைக்கான அலங்காரமாக நிறுவப்பட்டது மற்றும் பூட்டானில் உள்ள கௌரவ அமைப்பின் உயரிய விருதாக இது கருதப்படுகிறது. 

அதன் நிறுவனத்திலிருந்து, இதுவரை இந்த விருது நான்கு சிறந்த ஆளுமைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பூடானின் உயரிய குடிமகன் விருதைப் பெறும் முதல் வெளிநாட்டு அரசாங்கத் தலைவராகிறார் பிரதமர் மோடி.

A very memorable welcome in Bhutan! Throughout the way, there were several people who had gathered. I cherish their affection greatly. pic.twitter.com/0BQVVsxmFf

— Narendra Modi (@narendramodi)

இதற்கு முன்பு 2008 ஆம் ஆண்டு ராணி தாடி ஆஷி கேசங் சோடன் வாங்சுக் இந்த கௌரவத்தைப் பெற்றவர். அதே ஆண்டில் ஜெய் 3ன் டென்சின் டெண்டப்புக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டது. மேலும் 2018ல், இந்த கௌரவம் ஜெ கென்போ ட்ருல்கு நகாவாங் ஜிக்மே சோத்ராவுக்கு வழங்கப்பட்டது. ஜெ கென்போ மத்திய பூட்டானின் முக்கிய மடாலயமாகும்.

கவிதா மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. விசாரணை நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்..

click me!