பிரதமர் மோடி: ஜெர்மனியில் நடக்கும் 2 நாள் ஜி 7 மாநாட்டில் பங்கேற்பு  

By Dhanalakshmi GFirst Published Jun 25, 2022, 10:08 AM IST
Highlights

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனி 
நாட்டிற்கு செல்கிறார். அந்த நாட்டின் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பை ஏற்றுச் செல்கிறார். இங்கு 

இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிர அரபு அமீரகம் செல்கிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனி 
நாட்டிற்குசெல்கிறார். அந்த நாட்டின் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பை ஏற்றுச் செல்கிறார்.

ஜூன் 26 & 27 தேதிகளில் நடைபெற்ற உள்ள உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக ஜெர்மனிக்கு சென்றுள்ள மோடியை வரவேற்க தயாராகும் நடன கலைஞர்கள் pic.twitter.com/HLCZ9aiJtZ

— Asianetnews Tamil (@AsianetNewsTM)


நாளை 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கும் 48வது ஜி 7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், கனடா பிரதமர் ஜஸ்டின் 
ட்ரூடு  ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

ஜெர்மனி நாட்டில் இரண்டு நாட்கள் பயணத்தை முடித்துக் கொள்ளும் பிரதமர் மோடி, ஜூன் 28ஆம் தேதி 
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். வளைகுடா நாடுகளின் அதிபராக இருந்து சமீபத்தில் 
மறைந்த ஷேக் கலிபா பின் சையத் அல் நயன் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகிறார். இதைத் தொடர்ந்து 
புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஷேக் முகம்மது பின் சையத் அல் நயனை 
சந்தித்து வாழ்த்து கூறுகிறார்.

Watch : ஜூன் 26 & 27 தேதிகளில் நடைபெற்ற உள்ள உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக ஜெர்மனிக்கு சென்றுள்ள மோடியை வரவேற்க இந்திய மாணவி ஶ்ரீநிதி ஹரிபிரசாத் பரதநாட்டியம் ஆடத் தயாராகிறார். pic.twitter.com/tqHqUD3SyX

— Asianetnews Tamil (@AsianetNewsTM)


ஜெர்மனி பயணத்தில் நடைபெறும் ஜி 7 மாநாட்டில் சுற்றுச் சூழல், எரிவாயு, உணவு பாதுகாப்பு, ஆரோக்கியம், 
பாலின சமத்துவம், ஜனநாயகம் ஆகியவை குறித்து பேசுவார் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் 
தெரிவித்துள்ளது.

ஜெர்மனிக்கு கடந்த மே மாதம் பிரதமர் இறுதியாக பயணம் மேற்கொண்டு இருந்தார். 
மீண்டும் இன்று அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.

click me!