சூறையாடப்பட்ட ராகுல் அலுவலகம்… 8 இந்திய மாணவர் கூட்டமைப்பினர் கைது!!

Published : Jun 24, 2022, 10:40 PM IST
சூறையாடப்பட்ட ராகுல் அலுவலகம்… 8 இந்திய மாணவர் கூட்டமைப்பினர் கைது!!

சுருக்கம்

வயநாட்டில் அமைந்துள்ள ராகுல் காந்தியின் அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்திய மாணவர் கூட்டமைப்பினர் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வயநாட்டில் அமைந்துள்ள ராகுல் காந்தியின் அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்திய மாணவர் கூட்டமைப்பினர் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2019 தேர்தலில் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தி,  வெற்றி பெற்றார். இந்த நிலையில், தொகுதி மக்களின் நலனில் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு அக்கறை இல்லை என சொல்லி அவருக்கு எதிராக இன்று கல்பேட்டா நகரில் இந்திய மாணவர் கூட்டமைப்பினர் பேரணி நடத்தினர். இந்தப் பேரணி இன்று ராகுல் காந்தியின் அலுவலகம் அருகே வந்த போது திடீரென வன்முறை வெடித்துள்ளது. அதை தொடர்ந்து இந்திய மாணவர் கூட்டமைப்பின் கொடியுடன் அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த சிலர் அலுவலகத்தை சூறையாடி உள்ளனர். அலுவலகத்தை சூறையாடியதோடு இருக்கைகளை அடித்து நொறுக்கினர்.

விசாரணையில் அவர்கள் எஸ்எப்ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதற்கிடையே தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதற்கு இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களைச் சுற்றி ஒரு கிலோமீட்டருக்கு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை கட்டாயமாக்குவது தொடர்பாக சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதானால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி பகுதிகளில் உள்ள ஒரு கிலோமீட்டரில் ஆட்கள் வசிப்பது பற்றி ஆய்வு செய்ய கேரள வனத்துறை குழு ஒன்றை அமைத்துள்ளது.

இதனால் மலை மாவட்டமாக உள்ள வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி எம்பியாக இருந்தாலும் இதுபற்றி அவர் பேசவில்லை. இதனை கண்டித்து தான் எஸ்எப்ஐ சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுக்குறித்து காவல்துறையினர் கூறுகையில், ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார் 100 இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) செயற்பாட்டாளர்கள் இருந்ததாகவும், அவர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் தற்போது அவர்களில் 8 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

இந்தியர்களுக்கு நிம்மதி.. இண்டிகோவுக்கு செக்! புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்
இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம்