இந்தியாவிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, தற்பொழுது பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் இருக்கும் ஒர்லி விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
பிரான்ஸ் நாட்டின் தேசிய தின விழாவில் பங்கேற்கவும், இரண்டு நாள் அரசு பயணமாகவும் இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு இன்று காலை புறப்பட்டு சென்றார். சுமார் 90,000 கோடி மதிப்பிலான பல முக்கிய ஒப்பந்தங்கள் இந்த பயணத்தில் கையெழுத்தாகவுள்ளது. குறிப்பாக ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் ரஃபேல் போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கான ஒரு முக்கிய பயணமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை இந்தியாவிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, தற்பொழுது பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரின் ஒர்லி விமான நிலையத்தில் தரையிறங்கினார். அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்ன் உட்பட முக்கிய பிரமுகர்கள் மத்தியில் அணிவகுப்பு நடத்தப்பட்டு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரீஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார். இந்திய தேசிய கீதம் ஒலிக்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. pic.twitter.com/ZMCsMRNF6p
— Asianetnews Tamil (@AsianetNewsTM)தற்பொழுது பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் தரையிறங்கியுள்ள பிரதமர் மோடி நாளை ஜூலை 14ம் தேதி அந்நாட்டில் நடக்கும் தேசியதின விழாவில் பங்கேற்கவிருக்கிறார். இதில் இந்திய மற்றும் பிரான்ஸ் நாட்டின் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான்-3 விண்கலத்தில் விக்ரம்! சந்திரயான்-2 ல் இல்லாத சிறப்பு அம்சம் என்ன?
இதனை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் உள்ள நாடாளுமன்ற தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்த பிறகு அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் அவர் உரையாற்ற உள்ளார். அதன் பிறகு ஜூலை 15ம் தேதி பிரான்சிலிருந்து புறப்பட்டு அமீரகம் (UAE) செல்ல இருக்கிறார் மோடி. இந்த பிரான்ஸ் சுற்றுப்பயணத்தில் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
குறிப்பாக இந்த பயணத்தில் 26 ரஃபேல் ரக போர் விமானங்கள் வாங்கவும், 3 ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல்களை வாங்கவும் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு பிரான்ஸ் நகரில் நடந்த தேசிய தின விழாவில் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றார். அதன் பிறகு சுமார் 14 ஆண்டுகள் கழித்து இந்த விழாவில் மோடி பங்கேற்கிறார்.
இந்த விழாவில் பங்கேற்க பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல், இந்திய பிரதமர் மோடிக்கு சிறப்பு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.