World's most powerful passports: உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் உள்ள நாடு எது? இந்திய Passport நிலை என்ன?

By Pothy RajFirst Published Jan 11, 2023, 2:03 PM IST
Highlights

உலகளவில் சக்திவாய்ந்த நாடுகளின் பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவின் பாஸ்போர்ட்(கடவுச்சீட்டு) கடந்த 2022ம் ஆண்டில் இருந்த இடத்தில் இருந்து 2 இடங்கள் முன்னேறியுள்ளது

உலகளவில் சக்திவாய்ந்த நாடுகளின் பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவின் பாஸ்போர்ட்(கடவுச்சீட்டு) கடந்த 2022ம் ஆண்டில் இருந்த இடத்தில் இருந்து 2 இடங்கள் பின்தங்கியுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டில் 83வது இடத்தில் இருந்த இந்திய பாஸ்போர்ட் தற்போது 85வது இடத்துக்குச் சரிந்துள்ளது என ஹென்லே பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது. 

உலகளவில் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் வைத்திருக்கும் நாடாக ஜப்பான் திகழ்கிறது. ஜப்பான் மக்கள் உலகளவில் 193 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தப் பொருளாதாரச் சவால்களையும் இந்தியா சிறப்பாக சமாளிக்கும்: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவைப் பொறுத்தவரை 193 நாடுகளில் 59 நாடுகளுக்கு மட்டுமே இந்தியர்கள் விசா இன்றிசெல்ல முடியும். அல்லது விசா இன்றி சென்று அந்நாட்டுக்கள் சென்றபின் விசா எடுத்துக்கொள்ளலாம். 
2வது இடத்தில் சிங்கப்பூர் மற்றும் தென் கொரிய நாடுகள் உள்ளன. ஜெர்மன் மற்றும் ஸ்பெயின் நாடுகள் இணைந்து 3வதுஇடத்தைப் பிடித்துள்ளன.

ஹென்லே அன்ட் பார்ட்னர்ஸ் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

உலகளவில் 227 நாடுகளில் ஜப்பான் பாஸ்போர்ட் வைத்திருக்கும் மக்கள் 193 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும். அதைத் தொடர்ந்து தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் மக்களும் 192 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம் அல்லது விசா இன்றி சென்று அந்த நாட்டில் இறங்கியபின் விசா பெறலாம். 

ஸ்பெயின் மற்றும் ஜெர்மன் நாட்டு மக்கள் 190 நாடுகளுக்கு விசா இன்றி பயணித்து, அந்நாட்டுக்குச் சென்று விசா பெற முடியும். பிரிட்டன் விசா 6வது இடத்தையும், அமெரிக்க விசா 7வது இடத்தையும்  பிடித்துள்ளன. இதில் பிரிட்டன் மக்கள் விசாஇந்றி 187 நாடுகளுக்கும், அமெரிக்க மக்கள் 186 நாடுகளுக்கும் விசா இன்றி செல்ல முடியும்.

ஆர்எஸ்எஸ் பயிற்சியில் ராகுல் காந்தி பங்கேற்க வேண்டும்: பாஜக அழைப்பு

உலகளவில் மோசமான விசா வைத்திருக்கும் நாடாக ஆப்கானிஸ்தான் இருக்கிறது.
உலகளவில் உலகளவில் வெறும் 6 சதவீத பாஸ்போர்ட்டு மட்டுமே, உலகப் பொருளாதாரத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளுக்கு விசா இல்லாத செல்ல முடிகிறது. 227 நாடுகளில் 5-ல் 4பகுதி நாடுகளுக்கு விசா இன்றி செல்ல 17 சதவீத நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களால்தான் முடியும்.

உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இருக்கும் இந்தியா பாஸ்போர்ட் தரவரிசையில் 85வது இடத்தில் உள்ளது. இந்திய குடிமகன்கள் தங்கள்  பாஸ்போர்ட் மூலம் 59 நாடுகளுக்கு விசா இன்றி பயணித்து அந்நாட்டுக்கு சென்று விசா பெறலாம். 

இந்தியா 2022ம் ஆண்டில் 83வது இடத்திலிருந்து 85க்குச் சரிந்துள்ளது. 2019ல்82வது இடம், 2020ல்84வது இடம், 2021ல் 85வதுஇடத்தில் இருந்தது. 

பூடான், கம்போடியா, இந்தோனேசியா, மாகோ,மாலத்தீவு,நேபாளம், இலங்கை,தாய்லாந்து, கென்யா, செசல்ஸ், ஜிம்பாப்வே, கத்தார் நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இன்றி சென்று அந்நாட்டுக்குச் சென்று விசா பெறலாம். ஆனால் இந்தியர்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் நாடுகளுக்குவிசா இன்றி செல்ல முடியாது.

ஆனால், ஜப்பான் மக்களைப் பொறுத்தவரை 193 நாடுகளுக்கு விசா பெறாமல், அடையாள அட்டை, பாஸ்போர்ட் மட்டும் வைத்துக்கொண்டு சென்றுஅந்நாட்டில் சென்று விசா பெறலாம்.பாகிஸ்தான் மக்கள் 32 நாடுகளுக்குத்தான் விசாஇன்றி செல்ல முடியும். மிகக்குறைவாக ஆப்கானிஸ்தான் மக்கள் 27 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி செல்லலாம். 

அமெரி்க்காவைப் பொறுத்தவரை டாப்-22 நாடுகள் பட்டியலில் உள்ளதால், 186 நாடுகளுக்கு விசா இன்றிசெல்லலாம். ஸ்விட்சர்லாந்து, நியூஸிலாந்து, நார்வே மக்களும் 186 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். 

சீனா மக்கள் 80 நாடுகளுக்கு விசாஇன்றி பயணிக்கலாம். 118 நாடுகளுக்கு ரஷ்ய மக்கள் விசா இல்லாமல் செல்லலாம். 

click me!