19 கப்பல்களால் உருவாகும் யோகா வளையம்! இந்திய கடற்படை சொல்லும் யோகா தின மெசேஜ்!

By SG Balan  |  First Published Jun 20, 2023, 11:27 PM IST

யோகா தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படை 19 கப்பல்களை பல்வேறு நட்பு நாடுகளின் துறைமுகங்களுக்கு அனுப்பி யோகா வளையத்தை உருவாக்க இருக்கிறது.


சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதன்கிழமை இந்திய கடற்படை யோகா வளையத்தை உருவாக்க உள்ளது. அதாவது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் பல்வேறு நட்பு நாடுகளின் துறைமுகங்களுக்குச் செல்கின்றன. அங்கு இந்த ஆண்டு யோகா தின கருப்பொருளான "வசுதைவ குடும்பம்" என்ற செய்தியைப் பரப்ப உள்ளன.

இந்தியக் கடற்படையின் கப்பல்கள் செல்லும் பெரும்பாலான வெளிநாட்டு துறைமுகங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் சட்டோகிராம், எகிப்தில் சஃபாகா, இந்தோனேசியாவின் ஜகார்த்தா, மொம்பாசா, கென்யாவில் உள்ள டோமாசினா, ஓமானில் மஸ்கட், இலங்கையில் கொழும்பு, தாய்லாந்தில் ஃபூகெட் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களுக்கு இந்தியக் கடற்படை கப்பல்கள் செல்லும். கில்டன், சென்னை, ஷிவாலிக், சுனைனா, திரிசூல், தர்காஷ், வாகிர், சுமித்ரா மற்றும் பிரம்மபுத்ரா ஆகிய இடங்களில் இருந்து கப்பல்கள் செல்கின்றன.

Tap to resize

Latest Videos

14:37 மணி நேர பயணத்தில் நியூயார்க் விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமர் மோடி!

Ocean Ring of Yoga என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, 19 இந்திய கடற்படைக் கப்பல்களில் ஏறக்குறைய 3,500 கடற்படை வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச கடல்களில் யோகாவின் தூதுவர்களாக 35,000 கிலோமீட்டர்களுக்கு மேல் பயணம் செய்துள்ளனர் என்று கடற்படை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு துறைமுகங்கள் அல்லது சர்வதேச கடல் பகுதியில் 11 கடற்படைக் கப்பல்களில் பணிபுரியும் 2,400 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதில் அடங்குவர். பல நாடுகளைச் சேர்ந்த 1,200 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கடற்படை வீரர்களும் இந்த யோகா தின கொண்டாட்டத்தில் இந்தியக் கடற்படையுடன் இணைகின்றனர்.

வெளிநாட்டு துறைமுகங்களில் இந்திய கடற்படை கப்பல்கள் நடத்தும் யோகா தின நிகழ்ச்சிகளில் அந்தந்த நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களும் பங்கெடுப்பார்கள் என்றும் இந்திய கடற்படையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா. சபையில் சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதைத் தடுத்த சீனா!

அனைத்து கடற்படை துறைமுகங்கள், தளங்கள், கப்பல்கள் மற்றும் நிறுவனங்களில் யோகா தின நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. கடற்படை வீரர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின் அதிகபட்ச பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக யோகா விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்டிருக்கிறது.

கடற்படையினரால் முகாம்கள், பட்டறைகள், சுவரொட்டி தயாரிப்பு போட்டிகள், வினாடி-வினா போட்டிகள் மற்றும் "யோகாவின் ஆரோக்கிய நன்மைகள்" என்ற தலைப்பில் விரிவுரைகளும் நடத்தப்படுகின்றன.

இந்தியாவால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. அதன்படி, முதல் முறையாக ஜூன் 21, 2015 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

போலீசை வைத்து மக்களை மிரட்டும் கர்நாடக அரசு... சித்தராமையாவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

click me!