உள்துறை அவரசர ஆலோசனை..!! போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசுகள்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 19, 2019, 7:17 PM IST
Highlights

அடுத்தடுத்து போராட்டம் நடந்துகொண்டே இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக டெல்லியில் உள்துறை அமைச்சகம் சார்பில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது . 

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்கள்,  டெல்லி ,  மேற்கு வங்கம் ,  என வட இந்தியா முழுவதும் போராட்டங்கள் தீவிரமாகி உள்ளது .  டெல்லி  ஜமியா பல்கலை மாணவர்கள் தொடங்கி வைத்த போராட்டம் உத்திரபிரதேசம் அலிகார் பல்கலைக்கழகம் மாணவர்கள்  என நாடு முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 சில இடங்களில் போராட்டங்கள்  வன்முறையாக மாறி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது . வன்முறைகளை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் ஆனாலும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது .  போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிரம் காட்ட வேண்டும் என உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.  இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது வாகனங்கள் போலீஸ் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது .  சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.  மேற்குவங்கத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தில் 4 ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது 

இந்த நிலையில் புதிய குடியுரிமை சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை என பிரதமர் மோடி,  மற்றும் அமித்ஷா ஆகியோர் தெரிவித்திருந்த நிலையிலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை . சமூக வலைதளங்களின் மூலம் போராட்டம் தீவிரம் அடையாமல் இருக்க சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிடுபவர்களை  கண்காணிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது .   அடுத்தடுத்து போராட்டம் நடந்துகொண்டே இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக டெல்லியில் உள்துறை அமைச்சகம் சார்பில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது .  இதில் உள்துறை செயலாளர் , மற்றும்  உளவுத்துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளது குறிப்பிடதக்கது.  
 

click me!