காங்கிரஸ் கூட்டணியில் நாங்கள் இல்லை... சிவசேனா அறிவிப்பால் கூட்டணியில் சலசலப்பு..!

By vinoth kumarFirst Published Dec 19, 2019, 5:57 PM IST
Highlights

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய்ராவத் கூறுகையில்;- நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறோம். அதற்காக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்று விட்டதாக அர்த்தம் இல்லை. காங்கிரஸ் கூட்டணியிலும் நாங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சிவசேனா சொந்த அடையாளத்துடன் சுதந்திரமாக செயல்படும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தங்கள் கட்சி அங்கம் வகிக்கவில்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் போராட்டத்திற்கு இடையே சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் இந்த 3 கட்சிகளும் ஓரணியில் இணைந்துள்ளது. ஆனால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்ததுக்கு சிவசேனா கட்சி ஆதரவு தெரிவித்து மக்களவையில் வாக்களித்தது. ஆனால், மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. சிவசேனாவின் இந்த நடவடிக்கையால் காங்கிரசுக்கும், சிவேசனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு தொடங்கியது. 

இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்தத்தை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் குடியரசுத் தலைவர் சந்தித்து மனு அளித்தனர். ஆனால், இதில் சிவசேனா கட்சி பங்கேற்கவில்லை.

இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய்ராவத் கூறுகையில்;- நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறோம். அதற்காக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்று விட்டதாக அர்த்தம் இல்லை. காங்கிரஸ் கூட்டணியிலும் நாங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சிவசேனா சொந்த அடையாளத்துடன் சுதந்திரமாக செயல்படும். 

எதிர்காலத்திலும் எந்த கூட்டணியிலும் சேராமல் தனித்தே செயல்படுவோம். பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்த போதே நாங்கள் தனித்து செயல்பட்டு வந்தோம். எங்களது தனித்தன்மையை நாங்கள் ஒருபோதும் விட்டு கொடுத்தது இல்லை என  சஞ்சய்ராவத் தெரிவித்துள்ளார்.

click me!