அதிர்ச்சி...! பாகிஸ்தானிய சிறுபான்மை மக்கள் இந்தியாவை நோக்கி வருவது ஏன்..? பகீர் தகவல்களை வெளியிடும் ஹரியூம் சாஹு..!

By ezhil mozhiFirst Published Dec 18, 2019, 5:40 PM IST
Highlights

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வருபர்களை வழி நடத்தவும், இந்தியாவில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு உதவி செய்யும் விதமாக பல்வேறு தன்னார்வலர்கள் களத்தில் இருக்கின்றனர். 

அதிர்ச்சி...! பாகிஸ்தானிய சிறுபான்மை மக்கள் இந்தியாவை நோக்கி வருவது ஏன்..? பகீர் தகவல்களை வெளியிடும் தன்னார்வலர்..! 

2019 இந்தியக் குடியுரிமை சட்டம் (Citizenship (Amendment) Bill 2019) படி, பாகிஸ்தான் வங்கதேசம் ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்றாலும் இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் தொடர்ந்து வசித்து வந்தவர்களுக்கு திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின்(2019) மூலம், அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதே ஆகும் 

ஆனால் இஸ்லாமியர்கள் இதில் சேர்க்கபடவில்லை என்பதால், இந்த சட்டம் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறி இருந்தால் அவர்களுக்கு திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மூலம் குடியுரிமை கிடைக்கும். இவ்வாறு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வருபர்களை வழி நடத்தவும், இந்தியாவில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு உதவி செய்யும் விதமாக பல்வேறு தன்னார்வலர்கள் களத்தில் இருக்கின்றனர். இந்தியாவிற்கு தஞ்சம் தேடி சட்டப்படி விசா பெற்று வந்தவர்களுக்கு தேவையான பள்ளிக்கூட வசதி, இருப்பிட வசதி , உண்ண உணவு முதல் மிகவும் ஏழ்மை என்றால் உடுத்த உடை வரையிலும்,மருத்துவ வசதி பெறுவதற்கும், வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதற்கும் பல தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு உதவ தேவைப்படும் தொகையை பேருந்து நிலையம், ரயில் நிலையம் என பல பொது இடங்களில் மக்களிடம் நேரடியாக உதவி பெற்று தொடர்ந்து பல நன்மைகளை செய்து வருகின்றனர். இது தவிர்த்து, பாகிஸ்தானில் இருந்து இந்தியா வர விருப்பம் தெரிவிக்கும் நபர்களுக்கு விசா எடுத்து கொடுக்க உதவி செய்வதும் உண்டு. இவ்வாறு தஞ்சம் வரும் சிறுபான்மை மக்கள் பாகிஸ்தானில் அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதையும் விவரித்து உள்ளனர்.

"அடிமைத்தனமாகவும், சிறு வயதிலேயே திருமணம் செய்துகொள்ள வைப்பதும், அடித்து உதைத்து துன்பப்படுத்துவதும், வேலை செய்யும் இடத்தில் கூட இன வேறுபாடு, மத வேறுபாடு என அனைத்தையும் காரணம் காட்டி பல தாக்குதலுக்கு உள்ளாவதும், இதை எல்லாம் மீறி அடி உதை என பல இன்னல்களை அனுபவித்து வந்துள்ளதை" குறிப்பிட்டு உள்ளனர்.


 
இவர்களெல்லாம் உதவும் தன்னார்வலர்கள், நாட்டின் பல முக்கிய நகரங்களில் முகாம் அமைத்து உதவி செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக டெல்லியில் மட்டும் 4 முக்கிய இடங்களில் முகாமிட்டு, இதுவரை 2500- கும் மேற்பட்டவர்களுக்கு உதவி செய்து உள்ளனர். இந்த நிலையில், திருத்தப்பட்ட  குடியுரிமை சட்டம் குறித்து டெல்லியில் உள்ள தன்னார்வலர் ஹரியூம் சாஹு என்பவர் கருத்து தெரிவிக்கும் போது,  

"இது உண்மையில் வரவேற்க வேண்டிய  விஷயம். இதற்கு முன்னதாக 1955 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்தின் படி 11 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வசிக்கும் பிற தேசத்தவர்களை இந்திய குடிமக்களாக ஏற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டப்படி 6 ஆண்டுகள் இந்தியாவில் தொடர்ந்து வசித்து வந்தாலே குடியுரிமை வழங்க உள்ளதால், அகதிகளாக வந்த மக்கள் பயன்பெறுவர். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தானில் வசிக்கக்கூடிய சிறுபான்மையினரின் இந்திய வருகை அதிகரித்து உள்ளது" என தெரிவித்து உள்ளார்.

click me!