எனது மரணத்துக்கு பிறகு 10,000 கோடி சொத்துக்கள் யாருக்கு..? உருக்கத்துடன் உயில் எழுதிய நித்யானந்தா..!

By vinoth kumarFirst Published Dec 18, 2019, 3:19 PM IST
Highlights

தாம் யாருக்கும் எதிரானவன் அல்ல என்றும், ஸ்ரீகைலாசா மூலம் சமூகத்துக்கு ஆன்மிக பணியை செய்து வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளார். இந்தியா தமது தாய் போன்றது. தாம் மரணம் அடைந்த பிறகு மதுரை ஆதீனத்தில் எந்த முறையில் உடலை அடக்கம் செய்வோர்களோ அதேபோன்று பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் தம்மை அடக்கம் செய்ய வேண்டும் என உயில் எழுதி வைத்திருப்பதாக நித்தியானந்தா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

எனது மரணத்துக்கு பிறகு தமது உடலை பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என நித்யானந்தா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். 

பாலியல் குற்றச்சாட்டுகள், குழந்தை கடத்தல் குற்றச்சாட்டு, முன்னாள் சீடர்களுக்குக் கொலை மிரட்டல் என பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள சாமியார் நித்தியானந்தாவை குஜராத் நீதிமன்றம், கர்நாடக நீதிமன்ற, வெளியுறவுத் துறை அமைச்சகம் என்று எத்தனை பேர் தேடினாலும், அவர் நிழல் இருக்கும் இடம் கூட இன்னும் இந்திய அரசு தரப்புக்குத் தெரியவில்லை. அரசு சார்பில், நித்தியானந்தா தலைமறைவாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டாலும், தினம் ஒரு வீடியோவை ரிலீஸ் செய்து மாஸ் காட்டி வருகிறார். 

அதில் தன்னைத் தேடுபவர்கள் பற்றியும், தன் மீதான குற்றச்சாட்டுகள் பற்றியும் கேலி செய்கிறார். தொடர்ந்து, ‘ஆன்மிக சொற்பொழிவுகளை' ஆற்றி வருகிறார். இவருக்கு சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், வழக்கம் போல் நித்தியானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தாம் யாருக்கும் எதிரானவன் அல்ல என்றும், ஸ்ரீகைலாசா மூலம் சமூகத்துக்கு ஆன்மிக பணியை செய்து வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளார். இந்தியா தமது தாய் போன்றது. தாம் மரணம் அடைந்த பிறகு மதுரை ஆதீனத்தில் எந்த முறையில் உடலை அடக்கம் செய்வோர்களோ அதேபோன்று பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் தம்மை அடக்கம் செய்ய வேண்டும் என உயில் எழுதி வைத்திருப்பதாக நித்தியானந்தா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். தமது சொத்துக்கள் அனைத்தும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய 3 குருபரம்பரை ஆதீனத்துக்கு சேரும் வகையில், உயில் எழுதி வைத்திருப்பதாக நித்தியானந்தா கூறியுள்ளார்.

click me!