உலகின் தலைசிறந்த விஸ்கியாக இந்திய விஸ்கி தேர்வு!

By Manikanda Prabu  |  First Published Oct 3, 2023, 2:52 PM IST

உலகின் தலைசிறந்த விஸ்கியாக  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இண்ட்ரி விஸ்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விஸ்கியை உலகின் சிறந்த விஸ்கி பிராண்டாக விஸ்கிஸ் ஆஃப் தி வேர்ல்ட் தேர்வு செய்துள்ளது. உலகின் மிகப்பெரிய விஸ்கி ருசிக்கும் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அந்தவகையில், நடப்பாண்டு நடைபெற்ற போட்டியில், உலகெங்கிலும் உள்ள 100 வகையான விஸ்கிகள் ருசிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், இந்திய தயாரிப்பான இண்ட்ரி விஸ்கியின் தீபாவளி கலெக்‌ஷன் பதிப்பு 2023ஆனது, 'டபுள் கோல்ட் பெஸ்ட் இன் ஷோ' விருதைப் பெற்றது.

விஸ்கிஸ் ஆஃப் தி வேர்ல்ட் விருதில் கலந்து கொள்ளும் விஸ்கிகள் பல சுற்றுகள் போட்டியிடும். அவற்றின் சுவை ஒவ்வொரு கட்டத்திலும், பல்வேறு வகைகளில் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அல்கோ-பெவ் துறையை சேர்ந்த மூத்த சுவைதயாரிப்பாளர்கள் கொண்ட நிபுணர்கள் குழு, ஒவ்வொரு கட்டத்திலும் சிறந்த விஸ்கியை அறிவித்து இறுதியாக, உலகின் தலைசிறந்த விஸ்கி தேர்வு செய்யப்படுகிறது.

Tap to resize

Latest Videos

அமெரிக்க சிங்கிள் மால்ட், ஸ்காட்ச் விஸ்கி, போர்பன்ஸ், கனடியன் விஸ்கி, ஆஸ்திரேலிய சிங்கிள் மால்ட் மற்றும் பிரிட்டிஷ் சிங்கிள் மால்ட் போன்ற நூற்றுக்கணக்கான சர்வதேச பிராண்டுகளை இந்திய பீட் கிளாஸ் விஸ்கியான இண்ட்ரி விஸ்கி தோற்கடித்துள்ளது. மால்ட் பார்லியை உலர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் கரி நெருப்பால் வெளியிடப்படும் கலவைகளால் ஒரு ஸ்மோக்கி ஃப்ளேவர் கொடுக்கப்படும்  விஸ்கியே பீட் கிளாஸ் (Peated whisky) விஸ்கி எனப்படுகிறது.

இதுகுறித்து இந்திய விஸ்கி தயாரிப்பாளரான இண்ட்ரி கூறுகையில், “உலகெங்கிலும் உள்ள சிறந்த விஸ்கிகளில் இண்ட்ரி ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. மதிப்புமிக்க விஸ்கிஸ் ஆஃப் தி வேர்ல்ட் விருதுகளில் இண்ட்ரி தீபாவளி கலெக்டரின் பதிப்பு 2023 டபுள் கோல்ட் விருதைப் பெற்றுள்ளது. உலகெங்கிலும் உள்ள இந்திய சிங்கிள் மால்ட்கள் வளர்ந்து வருவதற்கு இந்த வெற்றியின் தரம் ஒரு சான்றாகும்.” என தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

“இண்ட்ரி தீபாவளி கலெக்டர் பதிப்பு 2023ஆனது ஆறு வரிசை பார்லியால் செய்யப்பட்ட பீட் இந்திய சிங்கிள் மால்ட் ஆகும். இது இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட பாரம்பரிய செப்பு பாத்திரத்தில் வடிகட்டப்படுகிறது. வட இந்தியாவின் துணை வெப்பமண்டல காலநிலைக்கு மத்தியில், PX ஷெர்ரி கேஸ்கில் வைக்கப்பட்டு சிறந்த விஸ்கியாக உருவாவதற்கான காலம் வரை பக்குவமாக பாதுகாக்கப்படுகிறது. மிட்டாய் உலர்ந்த பழங்கள், வறுக்கப்பட்ட கொட்டைகள், நுட்பமான மசாலா, ஓக், பிட்டர்ஸ்வீட் சாக்லேட் போன்ற எண்ணற்ற சுவைகளுடன் இதன் ஸ்மோக்கி ஃப்ளேவர் உங்களை கவர்ந்திழுக்கும்.” எனவும் இண்ட்ரி விஸ்கி தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

டோக்கியோ விஸ்கி மற்றும் ஸ்பிரிட்ஸ் போட்டி 2023, லாஸ் வேகாஸில் நடந்த சர்வதேச விஸ்கி போட்டியான ஐம்பது சிறந்த உலக விஸ்கிகள் 2022 விருது உள்ளிட்டவைகளை இதற்கு முன்பு இண்ட்ரியின் சிங்கிள் மால்ட் டிரினி வென்றுள்ளது. மேலும், உலகின் டாப் 20 விஸ்கிகள் பட்டியலிலும் இண்ட்ரியின் சிங்கிள் மால்ட் டிரினி இடம்பெற்றுள்ளது.

click me!