நிலவில் கால் பதித்த விக்ரம், பிரக்யான் ஏன் உறக்கத்தில் இருந்து விழிக்கவில்லை? இதுதான் காரணம்!!

By Dhanalakshmi G  |  First Published Oct 3, 2023, 2:48 PM IST

சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவுக்கு சென்றது. அதில் இருந்து நிலவில் காலடி பதித்த விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் நிலவில் நடக்கும் விஷயங்களை படம் பிடித்து அனுப்பியது.


சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்து நிலவில் காலடி வைத்திருக்கும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் 14 நாட்கள் நிலவில் நடந்த விஷயங்களை படம் பிடித்து இஸ்ரோவுக்கு அனுப்பி வந்தது. உலகமே வியக்கும் அளவிற்கு நிலவின் தென் துருவத்தில் காலடி பதித்தது. விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருப்பதே தென் துருவம்தான். அப்படிபட்ட தென்துருவத்தில் இஸ்ரோ வெற்றியை பதித்தது. 

தென்துருவத்தில் பொதுவாக சூரிய ஒளி தொடர்ந்து விழுவதில்லை. இந்த நிலையில் தென்துருவத்தில் விக்ரம், பிரக்யான் இரண்டும் இறங்கிய நேரத்தில் சூரிய ஒளி இருந்தது. இவை இரண்டும் நன்றாக செயல்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில் உறக்க நிலைக்கு சென்றன.  இதையடுத்து, செப்டம்பர் 22ஆம் தேதி மீண்டும் விக்ரம் மற்றும் பிரக்யான் செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மீண்டும் சூரிய ஒளி கிடைத்து, செயல்படத் துவங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இவை இரண்டும் செயல்படவில்லை. இவை இரண்டையும் இயக்க வைப்பதற்கு இஸ்ரோவும் முயற்சி மேற்கொண்டது. ஆனால், விக்ரம், பிரக்யான் இரண்டிலும் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. தொடர்ந்து இவற்றை செயல்பட வைக்க இஸ்ரோ முயற்சித்து வருகிறது.

Tap to resize

Latest Videos

டேப்லெட் மார்க்கெட்டை டார்கெட் செய்யும் சாம்சங்! கேலக்ஸி டேப் A9 விரைவில் அறிமுகம்!

பிரக்யான் செப்டம்பர் 2ஆம் தேதியும், விக்ரம் செப்டம்பர் 4ஆம் தேதியும் உறக்கத்திற்கு சென்றன. பேலோடும் சுவிட் ஆப் ஆனது. பிரக்யானின் பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆகியுள்ளது. ரிசீவர் ஆன் செய்யப்பட்டது. மேலும் சூரிய தகடுகள் சூரிய ஒளியைப் பெறும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தன. அதேபோல், விக்ரமின் பேலோடுகளும் அதேபோல் வைக்கப்பட்டு இருந்தன. அப்படி இருந்தும் இவை இரண்டும் மீண்டும் செயல்படவில்லை.  

விக்ரம், பிரக்யான் ஏன் விழிக்கவில்லை? 
நிலவின் தென்துருவம் பொதுவாக இரவு நேரங்களில் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். 180 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் சீதோஷண நிலை இருக்கும். இது விக்ரம் மற்றும் பிரக்யான் பேட்டரிகளின் செயலை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இஸ்ரோ முயற்சித்து வருகிறது. 

விக்ரம், பிரக்யான் விழிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே கூறப்படுகிறது. நிலவில் நடக்கும் சீதோஷண மாற்றங்கள் மட்டுமே இதை தீர்மானிக்கும். ஒரு நிலவு நாள் 14 பூமி நாட்களுக்கு சமம் என்பதால், நிலவில் சூரிய அஸ்தமனம் அக்டோபர் 6, 2023 அன்று நிகழும் என்று தெரிய வந்துள்ளது. அப்படியே செயல்பாட்டுக்கு வந்தாலும் இஸ்ரோ அனுப்பும் கட்டளைகளை ஏற்று விக்ரம், பிரக்யான் செயல்படும்.

ஆப்பிள் ஐபோன் 13 வெறும் ரூ.16,449 தான்.. ஐபோன் 14 ரூ.23,249 மட்டுமே - அதிரடி ஆபர்

பிரக்யான் சக்கரத்தில் இஸ்ரோவின் லோகோ பதியப்பட்டு இருந்தது. நிலவில் பிரக்யான் இறங்கும்போது, இந்த லோகோ நிலவின் மேற்பரப்பில் பதியப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பதியப்படவில்லை. இதற்குக் காரணம் நிலவின் மேற்பரப்பு கரடுமுரடாக, சில இடங்களில் பாறைகட்டிகள் இருந்த காரணத்தினால், லோகோ பதியப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. விக்ரம், பிரக்யான் இரண்டும் விழிக்குமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

click me!