
மகளிர் தினம் - உருவான வரலாறு :
1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் பெண்கள் பிப்ரவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமையின் போது `உணவு, அமைதி’ ஆகியவற்றிற்காக போராடினர்; இது க்ரீகோரியன் நாள்காட்டியின்படி, ஐரோப்பிய நாடுகளின் மார்ச் 8 என்று கணக்கிடப்படும் நாளாக இருந்ததால், இந்த நாளின் சர்வதேச மகளிர் தினம் காலப்போக்கில் அனுசரிக்கப்படத் தொடங்கியது.
சர்வதேச மகளிர் தினம் :
கடந்த 1975ஆம் ஆண்டு சர்வதேச மகளிருக்கான ஆண்டு எனவும், அன்று முதல் மார்ச் 8 ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினமாக அனுசரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் பிப்ரவரி 13 அன்று தேசிய மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. பெண்களின் உரிமைக்காகப் போராடியவரும், கவிஞருமான சரோஜினி நாயுடுவின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக, இந்த நாள், `தேசிய மகளிர் தினமாகக்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்நாள் பல நாடுகளில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பது பெண் இனத்தின் பெருமைகளை மற்றவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
மத்திய அரசு அறிவிப்பு :
இந்நிலையில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு மகிழ்ச்சியான முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, இன்று ஒரு நாள் மத்திய அரசின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், தொல்பொருள் ஆராய்ச்சி இடங்கள் ஆகியவற்றை பார்வையிட, பார்வையாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.