கேரள மாநிலம் கொல்லத்தில் நேற்று முன் தினம் இரவு ராணுவ வீரர் ஒருவர் மர்ம கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில், கேரளாவில் இருக்கும் சட்டம்-ஒழுங்கு நிலை இந்தியாவுக்கு கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது என்று கேரள பாஜக தலைவர் அனில் ஆண்டனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ இஸ்லாமிய சித்தாந்தத்துடன் இங்குள்ள அடிப்படைவாதிகள் சமூக விரோதிகளாக மாறி வருகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பற்ற பல நிகழ்வுகளை நாம் பார்த்திருக்கிறோம். சமூக விரோதிகளால் மக்கள் தாக்கப்படுகின்றனர்.” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் “ ராணுவ வீரர் ஒருவரை கும்பல் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நேற்று நடந்தது. அவரது கைகள் கட்டப்பட்டு முதுகில் PFI வர்ணம் பூசப்பட்டிருந்தது. இதுதான் கேரளாவின் அதிர்ச்சிகரமான நிலை. இந்த சம்பவம் குறித்து சிபிஎம் அல்லது காங்கிரஸ் தலைவர்கள் யாரும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதுதான் வேதனையான விஷயம். ஏனெனில் அவர்கள் அனைவரும் ஒரு சில சிறுபான்மையினரை திருப்திப்படுத்த முயற்சிக்கின்றனர். வெறும் வாக்கு வங்கி அரசியல் செய்து, குறிப்பிட்ட சில பிரிவினரை மகிழ்விக்க முயற்சிக்கின்றனர்.” என்று கடுமையாக விமர்சித்தார்.
கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்! ராணுவ வீரரைத் தாக்கி முதுகில் PFI எழுதிய மர்ம கும்பல்!
கேரள மாநிலம் கொல்லத்தில் நேற்று முன் தினம் இரவு ராணுவ வீரர் ஒருவர் மர்ம கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டார். மேலும் அவரின் முதுகில் PFI என்று எழுதிவிட்டு அவர்கள் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ராணுவ புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆண்டனி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.ஆண்டனியின் மகன். தான் அனில் ஆண்டனி. தனது தந்தையும் போல் காங்கிரஸில் சேராமல் அவர் பாஜகவை தேர்வு செய்துள்ளார். கேரளாவில் அவரை வைத்து அரசியல் காய்களை பாஜக நகர்த்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.