ராணுவ வீரரைத் தாக்கியதற்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு ராணுவ வீரர் அவரது வீட்டிற்கு அருகில் வைத்து மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தாக்கிய கும்பல் அவரது சட்டையைக் கிழித்து முதுகில் 'PFI' என்று எழுதிவிட்டுச் சென்றிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு ராணுவ வீரர் ஷைன் குமார் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கடக்கலில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டிருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
undefined
தாக்கப்பட்ட ஷைன் குமார் இந்திய ராணுவத்தின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் (EME) கார்ப்ஸில் பணிபுரிந்து வந்துள்ளார். விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்திருந்த நிலையில், கடைசி விடுமுறை நாளில் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரியவந்துள்ளது.
சத்தீஸ்கரில் மக்களுடன் உரையாடியபடி ரயிலில் பயணம் செய்த ராகுல் காந்தி!
இந்திய தண்டனைச் சட்டம் உள்பட தொடர்படைய பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத ஆறு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
"பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, வீட்டின் அருகே சிலர் நிற்பதைப் பார்த்தேன். அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் யாரோ ஒருவர் குடிபோதையில் படுத்துக் கிடப்பதாகவும், அந்த நபரை உங்களுக்குத் தெரியுமா என்றும் கேட்டார்கள்" என்று ராணுவ வீரர் ஷைன் குமார் தனது புகாரில் தெரிவித்திருப்பதாக கடக்கால் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
ஷைன் குமார் அவர்களுடன் ரப்பர் தோட்டத்திற்குச் சென்றதாகவும், அங்கு சென்றதும், யாரோ அவரை பின்னால் இருந்து உதைத்து, கைகளைக் கட்டி, அவரை அடித்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். அப்போது அவர்கள் ஷைன் குமாரின் முதுகில் ‘PFI’ என்று எழுதியிருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
ஷைன் குமார் தற்போது தனது வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் அவருக்கு உடலில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். அவர் தன் ராணுவப் பணியில் தொடர ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மருக்குத் திரும்புகிறார் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
PFI கடந்த ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு ஆகும்.
தந்திரமாக லாபம் ஈட்டிய ரயில்வே; செய்த மாற்றம் இதுதான்; அள்ளியது கோடியில்!!