இந்திய விமானப்படைக்கு தேஜாஸ் மார்க் 1-ஏ போர் விமானங்களும், விமானப்படை மற்றும் ராணுவத்திற்கு ஹெலிகாப்டர்களும் வாங்கப்பட உள்ளன.
இந்திய ராணுவத்திற்கு 97 தேஜாஸ் விமானங்கள் மற்றும் 156 பிரசாந்த் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பலான ஒப்பந்தங்களுக்கு மத்திய பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இவை இரண்டும் உள்நாட்டிலேயே உருவாக்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானப்படைக்கு தேஜாஸ் மார்க் 1-ஏ போர் விமானங்களும், விமானப்படை மற்றும் ராணுவத்திற்கு ஹெலிகாப்டர்களும் வாங்கப்பட உள்ளன. இது தவிர வேறு ஒப்பந்தங்களுக்கும் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது இந்திய வரலாற்றில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெற்ற மிகப்பெரிய ஆர்டர் ஆகும். பேச்சுவார்த்தைக்கு பிறகு, பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு விலையை இறுதி செய்யும். விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்: 7 புதிய மசோதாக்களை தாக்கல் செய்யும் மத்திய அரசு!
இந்திய விமானப்படை 260 க்கும் மேற்பட்ட Su-30 விமானங்களைக் கொண்டுள்ளது. இவற்றை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட சுகோய் விமானங்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரேடார்கள், ஏவியோனிக்ஸ் மற்றும் துணை அமைப்புகளுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேஜாஸ் Mk-1A இலகுரக போர் விமானம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நான்காம் தலைமுறை போர் விமானம் ஆகும். இது எலக்ட்ரானிக் ஸ்கேன், ரேடார், எலக்ட்ரானிக் வார்ஃபேர் தொகுப்பு மற்றும் வானில் பறந்தபடி எரிபொருள் நிரப்பும் திறன் என பல சிறப்பு அம்சங்களைக் கொண்டது. இதை பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உருவாக்கியுள்ளது.
இது இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் போர் விமானமாகும். பிப்ரவரி 2019 இல் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படுவதற்கான இறுதி அனுமதியைப் பெற்றது. பிரசாந்த் இலகு ரக ஹெலிகாப்டர்களின் முதல் தொகுதி கடந்த ஆண்டு விமானப்படையில் இணைக்கப்பட்டது. இது 5.8 டன் எடையுள்ள இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர் ஆகும். இதுவும் ஹெச்ஏஎல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
மிரட்டலான என்ட்ரி கொடுத்த டாடா டெக்! முதல் நாளே பங்கு விலை 180% சதவீதம் உயர்வு!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D