சீனா, பாகிஸ்தானை எல்லையில் எதிர்கொள்ள பிரலே ஏவுகணை ரெடி; உள்நாட்டு தயாரிப்பில் அசத்தல்!!

By Dhanalakshmi G  |  First Published Nov 8, 2023, 11:15 AM IST

விரைவில் இந்திய ராணுவத்தில் பாகிஸ்தான், சீனாவை எதிர்கொள்ளும் வகையில் புதிய பிரலே ஏவுகணை சேர்க்கப்பட இருக்கிறது. 


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது பிரலே ஏவுகணை. தரையிலிருந்து செலுத்தக் கூடிய ஏவுகணையான 'பிரலே' ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவி சோதித்து பார்க்கப்பட்டது. 

இந்த ஏவுகணை 150 மீட்டர் தொலைவில் இருந்து 500 மீட்டர் வரை எதிரிகளின் இலக்கை குறிவைத்து அழிக்கக் கூடியது. இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை எல்லையில் பாகிஸ்தான், சீனாவின் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை இந்த இருநாடுகளின் எல்லையில் நிலை நிறுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. இது இந்திய ராணுவத்துக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

அது செக்ஸ் கல்வி... தப்பா எடுத்துக்க கூடாது: நிதிஷ் குமாருக்கு முட்டுக்கொடுக்கும் தேஜஸ்வி யாதவ்

சீனாவின் டாங் பெங் 12, ரஷ்யாவின் இஸ்கந்தர் ஏவுகணைகளைப் போன்று வலுவானது. ரஷ்யா இந்த ஏவுகணையைத் தான் தற்போது உக்ரைன் உடன் நடக்கும் போரில் பயன்படுத்தி வருகிறது. பாகிஸ்தானும் எதிரி நாடுகளிடம் இருந்து வரும் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் வகையில் ஏவுகணைகளை வைத்துள்ளது. 

பிரலே ஏவுகணை சோதனை எந்தவித இடையூறும், தொழில்நுட்பக் கோளாறும் இன்றி இலக்கை நோக்கி ஏவி சோதிக்கப்பட்டது. இதில் வெற்றியும் கிடைத்துள்ளது என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரலே ஏவுகணையின் பாதையானது கடற்கரையோரத்தில் உள்ள கண்காணிப்பு கருவிகள் மூலம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு, அதன் இலக்கு மற்றும் செயல்திறனை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

பிரலே ஏவுகணை 350-500 கிமீ குறுகிய தூர ஏவுகணையாகும். இது 500-1,000 கிலோ எடையை தாங்கும் திறன் கொண்டது. 

133 லேப்டாப்களைத் திருடிய ஹை-டெக் திருடன்! வலைவீசி சிக்க வைத்த பெங்களூரு போலீஸ்!

click me!