இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் CEO இவர் தான்.. இத்தனை கோடி சம்பளமா? ஷாக் ஆகாம படிங்க..

By Ramya s  |  First Published Dec 12, 2023, 2:14 PM IST

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரி யார்? அவரின் சம்பளம் எவ்வளவு என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்ட் (Thierry Delaporte) இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக உருவெடுத்துள்ளார். 2023 நிதியாண்டிற்கான தாக்கல்களில் அவரது சம்பள தொகுப்பை அந்நிறுவனம் வெளியிட்ட நிலையில் இந்த தகவல் தெரியவந்தது. அதன்படி தியரி டெலாபோர்ட் இந்த நிதியாண்டில் சுமார் ரூ.82 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

அவரின் இந்த சம்பளம் மற்ற முன்னணி ஐடி நிறுவனங்களான, எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் டிசிஎஸ் ஆகிய மூத்த நிர்வாகிகளின் சம்பளத்தை விட அதிமம் என்பதால் அவர் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக மாறி உள்ளார். எந்த ஒரு இந்திய ஐடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளமும் இவரின் சம்பளத்தை நெருங்ககூட முடியவில்லையாம்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

2020 ஆம் ஆண்டில், நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வணிகங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தியரி டெலாபோர்ட் கைப்பற்றினார். சந்தையில் இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் ரூ.93,400 கோடி. 56 வயதாகும் தியரி டெலாஃபோர்ட், 30 ஆண்டுகளாக சர்வதேச தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர். விப்ரோவில் சேர்வதற்கு முன்பு கேப்ஜெமினி என்ற பிரெஞ்சு ஐடி நிறுவனத்தி தலைமை இயக்க அதிகாரி (சிஓஓ) பதவி வகித்தார்.

பாரிஸ் பப்ளிக் யுனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸில் இருந்து பொருளாதாரம் மற்றும் நிதித்துறையில் பட்டம் பெற்ற அவர், 1992 இல், அவர் ஆர்தர் ஆண்டர்சன் & நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றத் தொடங்கினார். அவர் 1995 இல் கேப்ஜெமினி நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். 25 ஆண்டுகள் அங்கேயே பணியாற்றினார்.

தியரி டெலாபோர்ட்டின் சம்பளம் 2022 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2023 நிதியாண்டில் 3.3% அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. FY23 இல், விப்ரோவின் விற்பனை முந்தைய ஆண்டை விட 14% அதிகரித்துள்ளது, ஆனால் அதன் நிகர லாபம் 7.2% குறைந்துள்ளது. தியரி டெலாபோர்ட் விப்ரோ நிறுவனத்தின் 2023 நிதியாண்டு விற்பனையில் 0.1%க்கு சமமான பங்கை பெறுகிறார்..

முன்னதாக தியரி டெலாபோர்ட் ஃபோர்ப்ஸ் இதழுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது விப்ரோவின் நிறுவனரும் தலைவருமான அசிம் பிரேம்ஜியுடன் தலைமை நிர்வாக அதிகாரியின் பொறுப்புகள் பற்றி விவாதித்ததை நினைவு கூர்ந்தார். மேலும் "அசிம் ஒரு நம்பமுடியாத மனிதர், தொழில்முனைவோர் மற்றும் நன்கொடையாளர், நாங்கள் முதலில் சந்தித்தபோது ஒரே மொழி மற்றும் ஒரே மாதிரியான முன்னுரிமைகள் மற்றும் மதிப்புகள் இருந்தன. சந்தேகத்திற்கு இடமின்றி எங்களுக்கிடையில் ஒரு பகிரப்பட்ட குறிக்கோள் இருந்தது. எனது எதிர்காலம் குறித்த எனது பார்வை கடுமையாக மாற்றப்பட்டது, மேலும் நான் CEO பதவியை ஏற்றுக்கொண்டேன்." என்று தெரிவித்தார்.

2023-ல் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட செய்திகள், நபர்கள், படங்கள், உணவுகள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ..

பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் (Persistent Systems) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சந்தீப் கல்ரா, இரண்டாவது அதிக ஊதியம் பெறும் நபர் கூறப்படுகிறது. நிறுவனம் அவருக்கு மொத்தம் ரூ.61.7 கோடி சம்பளம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

click me!