அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் திட்டத்திற்கு தயாராகும் இந்தியா - ஆயுதங்களை குவிக்க நடவடிக்கை

Asianet News Tamil  
Published : Dec 27, 2016, 01:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் திட்டத்திற்கு தயாராகும் இந்தியா - ஆயுதங்களை குவிக்க நடவடிக்கை

சுருக்கம்

சிறப்பு அதிரடி படையினரை பயன்படுத்தி  2-ம் கட்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்  திட்டத்திற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக  6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயுதங்கள், போர் விமானங்கள், விமானம் தாங்கி கப்பல்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் நடத்தப்பட்டதுபோல, 2-ம் கட்டமாக மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்த மத்திய அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது. இதில், கமாண்டோ அதிரடி படையினர், சிறப்பு அதிரடி படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இத்திட்டத்திற்காக 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. 



கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி இரவு இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் 7 தளங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தின. இதில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்தனர். உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது கமாண்டோ படையினர் மற்றும் சிறப்புப் படையினரை பயன்படுத்தி, 2-ம் கட்ட துல்லியத் தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது.

இதற்காக 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நவீன ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன. 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 புதிய விமானங்கள் வாங்கப்படவுள்ளன. 300 கோடி ரூபாய் செலவில் புதிய துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் போன்றவை கொள்முதல் செய்யப்படுகின்றன. மேலும், கடலோர காவல்படைக்கு என 6 புதிய விமானங்கள் வாங்கப்படவுள்ளன. எனினும் இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

PREV
click me!

Recommended Stories

ரோட்டுகடை முதல் ஸ்டார் ஹோட்டல் வரை..! அலறவிடும் உணவு பாதுகாப்பு அதிகாரி.. கொண்டாடும் சாமானியர்கள்
Bank Strike: வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்! 4 நாட்கள் முடங்கும் வங்கி சேவை?