விடுவிக்கப்பட்ட மீனவர்கள் வாகா எல்லை வருகை…உற்சாக வரவேற்பு…

Asianet News Tamil  
Published : Dec 27, 2016, 11:11 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
விடுவிக்கப்பட்ட மீனவர்கள் வாகா எல்லை வருகை…உற்சாக வரவேற்பு…

சுருக்கம்

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் வாகா எல்லை வருகை…உற்சாக வரவேற்பு…

பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்ட 220 இந்திய மீனவர்கள், வாகா எல்லை வந்தடைந்தனர். அவர்களை, இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். 
 

பாகிஸ்தான் கடல் பகுதியில் அத்துமீறி புகுந்து மீன் பிடித்ததாகக் கூறி, இந்திய மீனவர்களை அந்நாட்டு அரசு அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில், நேற்று முன்தினம் 220 இந்திய மீனவர்களை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்தது.

பாகிஸ்தானில் உள்ள மாலிர் சிறையில், இந்திய மீனவர்கள் 439 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 220 மீனவர்களை, பாகிஸ்தான் அரசு நேற்று முன்தினம் விடுதலை செய்து உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும், நேற்று மாலை வாகா எல்லை வந்து சேர்ந்தனர். அவர்களை, இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.

 

 

PREV
click me!

Recommended Stories

சென்னை டூ பெங்களூரு வெறும் 2 மணி நேரம் தான்! மணிக்கு 220 கி.மீ வேகம்.. கெத்தாக களமிறங்கும் புதிய ரயில்!
டேட்டிங் ஆப்பில் காதல்.. ஒருநாள் முழுக்க ஹோட்டலில் ஜாலி.. காலையில் காத்திருந்த ஷாக்