போகலாம்…போகலாம் ரைட் !!! டெல்லி  – நேபாளம் இடையே தொடங்கியது நேரடி பஸ் சர்வீஸ் !!!

 
Published : Oct 17, 2017, 07:06 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
போகலாம்…போகலாம் ரைட் !!! டெல்லி  – நேபாளம் இடையே தொடங்கியது நேரடி பஸ் சர்வீஸ் !!!

சுருக்கம்

india nepal direct bus service commenced

நேபாள நாட்டின் ரோப்லா மாவட்டத்தை புதுடெல்லியுடன் இணைக்கும் வாராந்திர நேரடி பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து சுமார் 280 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது  ரோப்லா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள லிவாங்க் நகரைச் சேர்ந்த  பிரபல போக்குவரத்து நிறுவனம் ஒன்று இந்திய தலைநகர் டெல்லியை ரோப்லா மாவட்டத்துடன் இணைக்கும் பஸ் சேவையை தொடங்க திட்டமிட்டது. இதற்கான அனுமதி அண்மையில் கிடைத்தது.

இதையடுத்து இந்தியா – நேபாளம் இடையே நேரடி பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பஸ் புதன்கிழமைகளில் ரோப்லாவில் உள்ள லிவாங் நகரில் இருந்து புறப்பட்டு பியுத்தான், பாலுவாங், நேபாள்கஞ்ச் வழியாக டெல்லி வந்தடையும்.

எதிர் திசையில் வெள்ளிக்கிழமைகளில் டெல்லியில் இருந்து புறப்பட்டு ரோப்லாவுக்கு செல்லும் இந்த வாராந்திர பஸ் சேவைக்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நேரடி பஸ் போக்குவரத்துக்கு சேவைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

 

 

PREV
click me!

Recommended Stories

நாடாளுமன்றத்தில் ஹாயாக சிகரெட் பிடித்த திரிணாமுல் காங். எம்.பி.! மம்தாவை கதறவிடும் பாஜக!
50% ஊழியர்களுக்கு Work From Home கட்டாயம்! ரூ.10,000 இழப்பீடு டெல்லியில் அரசு அதிரடி அறிவுப்பு!