‘ரேபிஸ்’ தடுப்பூசியை சொந்தமாக தயாரிக்கும் முதல் மாநிலம் கேரளா…. நாட்டிலேயே முதல்முறையாக சாதனை!!

First Published Oct 16, 2017, 9:15 PM IST
Highlights
rabis injection ... kerala govt is the first

நாட்டிலையே முதல்முறையாக ‘வெறி நாய்’ கடிக்கான ‘ரேபிஸ் தடுப்பூசியை’ சொந்தமாகத் தயாரிக்கும் முதல் மாநிலமாக கேரளா மாறப்போகிறது. இதற்காக ரூ.150 கோடியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி மருந்துகள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில், தனித்தனி ஆய்வகங்களில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த மருந்துகள் அனைத்தும் திருவனந்தபுரம் மாவட்டம், பாலோடு பகுதியில் செயல்பட்டு வரும் விலங்குகள் நலம் மற்றும் கால்நடை உயிரியில் ஆய்வகத்தில்(ஐ.ஏ.எச். வி.பி.) தயாரிக்கப்பட உள்ளது.

இது குறித்து மாநில கால்நடை மருத்துவத்துறையின் இயக்குநர் என்.என். சசிநிருபர்களிடம் கூறியதாவது-

ரேபிஸ் தடுப்பூசிகளை மிகவும் நவீன திசு வளர்ப்பு தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்க இருக்கிறோம். வெறி நாய் கடிக்கான ‘ரேபிஸ்’ தடுப்பூசியை சொந்தமாக, நேரடியாக தயாரிக்கும் முதல்மாநிலமாக கேரளா இருக்கும்.

இப்போது, கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு வரும் வைரஸ் மற்றும்பேக்டீரியாக நோய்களுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை மட்டும் எங்கள் ஆய்வகம் தயாரித்து வருகிறது. மனிதர்களுக்கும், விலங்களுக்கும் போடப்படும் ரேபிஸ்தடுப்பூசி தயாரிப்பது குறித்த விரிவான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆய்வகத்துக்கான மின்சாரம், நீர், நீராவி எந்திரம் ஆகியவற்றின் மதிப்பு குறித்து அரசிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் கடந்த மாதம் ஒரு பெண் குழந்தை உள்ளிட்ட ஏராளமானோர்நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். ஆனால், அதில் பலருக்கு ரேபிஸ் தடுப்பூசி மருந்து கிடைக்காமல் சிரமப்பட்டனர். அதைப் பார்த்தபின் தான் இந்த முடிவை நாங்கள் எடுத்தோம். எங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் கிடைத்தால், அடுத்த 6 மாதங்களில் தடுப்பூசி தயாரிக்கும் பணியைத் தொடங்கிவிடுவோம். எல்லாம் சரியாகச் சென்றால் அடுத்த 3 ஆண்டுகளில் தடுப்பூசி தயாராகிவிடும். இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.150 கோடியாகும்.

இந்த தடுப்பூசியை நாங்கள் தயாரிப்பது எங்கள் பயன்பாட்டுக்கு மட்டுமல்ல, மற்ற மாநிலங்களுக்கும் மிகக்குறைந்த விலையில் பயன்பாட்டுக்கு அளிப்போம். மேலும், அனைத்து கால்நடை மருத்துவமனைகளுக்கும் இந்த தடுப்பூசி அளிக்கப்படும்.

இப்போது நாங்கள் எங்களுக்குத் தேவையான ரேபிஸ் தடுப்பூசிகளை ஐதராபாத்தில்இருந்து இந்திய தடுப்பூசி மையத்தில் இருந்து பெற்று வருகிறோம். எங்கள் ஆய்வகத்தில் இருந்து ஒரு கோடி தடுப்பூசிகளை மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். தேவைக்கு ஏற்றார்போல் தடுப்பூசிகள் தயாரிப்பு அதிகப்படுத்தப்படும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

tags
click me!