நாடு முழுவதும் இயல்பை விட அதிகமாக தென்மேற்கு பருவமழை பெய்யும்: புவி அறிவியல் அமைச்சகம்!

By Manikanda Prabu  |  First Published Apr 16, 2024, 12:10 PM IST

தென்மேற்குப் பருவமழை காலத்தில் நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது


நடப்பாண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழையின் போது நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று புவி அறிவியல் அமைச்சக செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2024ஆம் ஆண்டின் தென்மேற்குப் பருவமழை குறித்து விளக்கமளித்தார். பருவகால மழையின் நீண்ட கால சராசரி  106% ஆக இருக்கும் என்றும், இது 5% கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம் என்றும் தெரிவித்தார். 1971-2020 தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் பருவகால மழையின் நீண்டகால சராசரி 87 செ.மீ. ஆக உள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த முன்னறிவிப்பு இயக்கவியல் மற்றும் புள்ளிவிவர மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், வடமேற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்றும் டாக்டர் ரவிச்சந்திரன் கூறினார். வடக்கு அரைக்கோளத்தில் இயல்பை விட குறைவான பனி உறைவு, 2024 தென்மேற்குப் பருவமழை காலத்தில் மழைக்கு சாதகமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த மூன்று மாதங்களில் (ஜனவரி முதல் மார்ச் 2024 வரை) வடக்கு அரைக்கோளத்தில் பனிப்பொழிவு இயல்பை விட குறைவாக இருந்தது, இது இந்தப் பருவமழை காலத்தில் அதிக மழைப்பொழிவைக் குறிக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் மொஹபத்ரா தெரிவித்தார். வடக்கு அரைக்கோளம் மற்றும் யூரேசியா முழுவதும் குளிர்கால மற்றும் வசந்த கால பனி பரப்பளவு பொதுவாக அடுத்தடுத்த பருவ மழையுடன் தலைகீழ் தொடர்பைக் கொண்டுள்ளது. வருகிற மே மாதம் கடைசி வாரத்தில் பருவ மழைக்கான புதுப்பிக்கப்பட்ட கணிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் என்று அவர் கூறினார்.

வெப்ப தலைநகராக மாறும் பெங்களூரு? 146 நாட்களாக மழை இல்லை!

மேற்கண்ட கணிப்புகளின் தொடர்ச்சியாக, முறையே ஜூன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் அடுத்தடுத்து வரும் ஒரு மாதத்திற்கான மாதாந்திர மழை முன்னறிவிப்பு வெளியிடப்படுகிறது. கூடுதலாக, நாடு முழுவதற்குமான மழை அளவு முன்னறிவிப்புகளும், பருவத்தின் இரண்டாம் பாதியில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) மழைப்பொழிவின் அளவும் ஆகஸ்ட் மாத முன்னறிவிப்புடன் ஜூலை மாத இறுதியில் வெளியிடப்படுகின்றன. அதன்படி, மே  கடைசி வாரத்தில் பருவ மழைக்கான புதுப்பிக்கப்பட்ட கணிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!