டிஜிட்டல் நிர்வாகத்தில் இந்தியா முன்மாதிரியாக உள்ளது: முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கருத்து

By SG Balan  |  First Published Jul 10, 2024, 6:45 PM IST

கோடிக்கணக்கான இந்தியக் குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள ஆவணங்களை வழங்குவதிலும், பணப் பலன்களை வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்துவதிலும் இந்தியாவின் திறமையாக செயல்பட்டுள்ளது என்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


கோடிக்கணக்கான இந்தியக் குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள ஆவணங்களை வழங்குவதிலும், பணப் பலன்களை வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்துவதிலும் இந்தியாவின் திறமையாக செயல்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

"மாறிவரும் உலக ஒழுங்கில் பிரிட்டனின் எதிர்காலம்" என்ற தலைப்பில் லண்டனில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்துகொண்டு பேசினார்.

Latest Videos

மாநாட்டில் பேசிய அவர், டிஜிட்டல் நிர்வாகத்திற்கு இந்தியா சிறந்த முன்னுதாரணமாக உள்ளது என்றும் ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். 2014 முதல் பத்து ஆண்டுகளில் இந்திய அரசு செய்த பணிகள் இந்தியாவின் செயல்திறனை மேம்படுத்த உதவியது என்றும் அவர் கூறியுள்ளார்.

3 வருஷமா அதிரி புதிரி சேல்ஸ்... XUV700 AX7 எஸ்யூவி கார் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த மஹிந்திரா!

"1.2 பில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கான டிஜிட்டல் அடையாளத்தை வழங்கியவது எங்கள் அரசின் முக்கிய அம்சமாகும். இதன் மூலம் செயல்படாத அரசாங்கத்தைக் கொண்டதாக விவரிக்கப்பட்ட இந்தியாவின் நிலையை பல வகைகளில் மாற்றியுள்ளது. 2014 க்கு முன், பெரும்பாலான ஆசிய நாடுகளைப் பற்றிய பொதுவான விவரிப்பு, அவர்களால் தங்கள் மக்களுக்கு டிஜிட்டல் சேவைகளை வழங்க முடியவில்லை என்பது. 2014 க்குப் பிறகு, நாங்கள் தொழில்நுட்பத்தை பரவலாக்கியதில் இருந்து, ​​செயலற்ற அரசாங்கம் என்ற நிலையை மாற்றினோம்." என்று ராஜீவ் கூறினார்.

"அரசு நிர்வாகத்தில் எங்கள் அணுகுமுறை தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை உள்ளடக்கியதாக இருந்தது. இந்தியா தனது டிஜிட்டல் உள்கட்டமைப்பை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. இது மற்ற ஜனநாயக நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் இருக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.

பார்வையாளர்கள் முன்னிலையில் டோனி பிளேயருடன் ராஜீவ் சந்திரசேகர் உரையாடினார். அவரது பேச்சை டோனி பிளேயர் பாராட்டினார். டிஜிட்டல் ஆட்சி முறையை நிறுவுவதற்கு ராஜீவ் சந்திரசேகர் எடுத்த முயற்சிகள் மற்றும் தலைமைத்துவத்தை வில்லியம் ஹேக் பாராட்டினார்.

முதல் முறையாக ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக்! டிசைன் ரெடி... ரீலீஸ் எப்போ தெரியுமா?

click me!