Fancy Car Number :சொன்னா நம்பமாட்டீங்க! ரூ.23 லட்சத்துக்கு விற்பனையான கார் பதிவு எண்!

By vinoth kumar  |  First Published Jul 10, 2024, 3:23 PM IST

வாகனங்களுக்கான பேன்சி பதிவு எண்களை பெறுவதற்கு போக்குவரத்து துறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடத்துகிறது. குறைந்தபட்ச ஏலத்தொகை 1 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பதிவு எண்களுக்கு, ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்திலும், மற்ற எண்களுக்கு வாரா வாரமும் ஏலம் நடத்தப்படுகிறது.


தலைநகர் டெல்லியில் வாகனங்களுக்கான பேன்சி பதிவு எண் பெறுவதற்கு நடத்தப்பட்ட ஏலத்தில் 0001 என்ற எண் 23.4 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வாகனங்களுக்கான பேன்சி பதிவு எண்களை பெறுவதற்கு போக்குவரத்து துறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடத்துகிறது. குறைந்தபட்ச ஏலத்தொகை 1 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பதிவு எண்களுக்கு, ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்திலும், மற்ற எண்களுக்கு வாரா வாரமும் ஏலம் நடத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் ஏல நடைமுறை, 2014 முதல் அமலில் உள்ளது.

Latest Videos

undefined

கார் வாங்குவது பலரது கனவாக இருந்தாலும் அதிலும் காரின் நம்பர் பேன்சியாக  இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். இந்நிலையில் வாகனங்களுக்கான பேன்சி பதிவு எண்களை பெறுவதற்கு போக்குவரத்து துறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடைபெறுகிறது. குறைந்தபட்ச ஏலத்தொகை 1 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பதிவு எண்களுக்கு, ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்திலும், மற்ற எண்களுக்கு வாரா வாரமும் ஏலம் நடத்தப்படுகிறது. 

இந்த ஆன்லைன் ஏல நடைமுறை 2014ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. டெல்லி போக்குவரத்து துறை கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை நடத்திய ஏலத்தில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் விரும்பும் 0001 என்ற பதிவு எண்ணுக்கு மார்ச் மாதம் ஏலம் நடத்தப்பட்டது. ஆரம்ப விலையாக ரூ.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இறுதி இந்த எண் கடும் போட்டிகளுக்கு இடையே 23.4 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. ஆனால் இந்த ஏலம் எடுத்த நபரின் விவரம் வெளியிடவில்லை. கடந்த ஜூன் மாதத்தில் 0009 என்ற பதிவு எண் ரூ.11 லட்சத்துக்கும், 0007 என்ற பதிவு எண் ஜனவரி மாதத்தில் ரூ.10.8 லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.  

click me!