Earthquake : சுனாமி எச்சரிக்கையா.? இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- அதிர்ச்சியில் மக்கள்

By Ajmal Khan  |  First Published Jul 10, 2024, 11:24 AM IST

இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கேப் டவுன் நகரத்தில் இருந்து 2,500 கி.மீ. தொலைவில் கடலின் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவு ஆகியுள்ளது.


சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தியாவில் ஆங்காங்கே சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது, மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி பகுதியில் இன்று காலை 7.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Latest Videos

இந்த சூழ்நிலையில் இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கேப் டவுன் நகரத்தில் இருந்து 2,500 கி.மீ. தொலைவில் கடலின் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவு ஆகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!