பாகிஸ்தான், சீனாவில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு என்று இந்தியா எல்லையில் ஸ்ரீநகரில் மேம்படுத்த்தப்பட்ட மிக் 29 ஜெட் விமானப்படைகள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், சீனா எல்லைகள் என்றுமே பதற்றமானதாக காணப்படுகின்றன. மத்திய அரசு இந்தப் பகுதிகளில் சமீப காலங்களில் மேம்படுத்தப்பட்ட ராணுவ தளவாடங்களை நிறுத்தி வருகிறது. எந்தச சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் சுரங்கப்பாதைகளை அமைத்து வருகிறது. இந்த நிலையில், வான்வெளியாக வரும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஸ்ரீநகரில் மேம்படுத்தப்பட்ட மிக் 29 ரக விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போது 'வடக்கு மாநிலங்களின் பாதுகாவலர்' என்று அழைக்கப்படும் மிக்-21 படைப்பிரிவு எல்லையில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, கடந்த காலங்களிலும் எல்லையில் பாதுகாப்புக்காக இந்த ஜெட் விமானங்கள் தான் நிறுத்தப்படுகின்றன.
'ஹர் கர் திரங்கா' இயக்கம்.. நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் - அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!
"காஷ்மீர் பள்ளத்தாக்கின் மையத்தில் ஸ்ரீநகர் அமைந்துள்ளது மற்றும் அதன் உயரம் சமவெளிகளை விட உயரமானது. இந்த இடத்தில் இருந்து எல்லைகளை கவனிப்பது எளிது, சிறந்த தளவாடங்களைக் கொண்டு பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளலாம். இங்கு நீண்ட தூரம் ஏவக்கூடிய ஏவுகணைகளைக் கொண்டு கண்காணிக்கலாம். மிக்-29 இது மாதிரியான அனைத்துப் பாதுகாப்புகளையும் உறுதி செய்கிறது. இதனால் தான் இரண்டு தரப்பிலும் இருந்து வரும் எதிர்ப்புகளையும் எங்களால் எதிர்கொள்ள முடிகிறது'' என்று இந்திய விமானப்படையின் பைலட் படைக்கான தலைவர் விபுல் சர்மா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளை பல ஆண்டுகளாக வெற்றிகரமாக பாதுகாத்து, 2019-ல் பாலாகோட் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது F-16-ஐ தாக்கியதில் MiG-21ஐ விட MiG 29 பல திறன்களைக் கொண்டுள்ளன.
MiG-29 ஜெட் விமானம் மிக நீண்ட தூர வான் விமான ஏவுகணைகள் மற்றும் வான், தரை ஆயுதங்களுடன் பொருத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. காபந்து அரசு பொறுப்பேற்றுள்ளது. 5 ஆண்டுகளை நிறைவு செய்வதற்கு மூன்று நாட்கள் இருக்கும்போது நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி ஆரிப் அல்விக்கு பிரதமர் செபாஸ் ஷெரீப் கடிதம் எழுதி இருந்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 90 நாட்களில் தேர்தல் நடத்த வேண்டும். காபந்து அரசு பொறுப்பேற்கும் வரை பிரதமராக ஷெரீப் நீடிப்பார். இந்த நிலையில் தான் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த விமானப்படை தரப்பில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.