திருப்பதியில் ஏழுமலையானை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், மலைப்பாதையில் சாலை மார்க்கமாகவும், ஸ்ரீவாரி மெட்டு, அலிபிரி ஆகிய நடைபாதைகளிலும் செல்வது வழக்கம்.
திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில் ஏழுமலையானை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், மலைப்பாதையில் சாலை மார்க்கமாகவும், ஸ்ரீவாரி மெட்டு, அலிபிரி ஆகிய நடைபாதைகளிலும் செல்வது வழக்கம்.பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் மான், கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி நடை பாதைக்கு வருகின்றன.
undefined
இதனால் பக்தர்கள் செல்லும் நடைபாதையில் வன விலங்குகள் நுழையாமல் இருப்பதற்காக சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு சில நேரங்களில் சில அசம்பாவித சம்பங்களும் நடக்கின்றன. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது சிறுத்தை ஒன்று கவுசிக் என்ற 3 வயது சிறுவனை கவ்விக்கொண்டு ஒரு புதருக்குள் ஓடியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர் கூச்சலிட்டதை அதை பின்தொடர்ந்து ஓடியதை அடுத்து சிறுவனை கீழே போட்டு விட்டு சிறுத்தை ஓடிவிட்டது. காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன், திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். இதனையடுத்து, கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில், தற்போது திருப்பதியில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த தினேஷ் குமார். அவரது மனைவி சசிகலா. இவர்களது மகள் லக்ஷிதா ( 6). தினேஷ்குமார் நேற்று இரவு மனைவி, மகளுடன் அலிபிரி நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அலிபிரி மலைப்பாதையில் சென்றுக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை சிறுத்தை கவ்வி காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்றது. பின்னர், லட்சுமி நரசிம்மசாமி கோவில் அருகே சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தனது மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி துடித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை தாக்கி சிறுமி பலியான சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது