வரும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நடைபெறும் 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தில் பங்கேற்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இந்தியக் கொடி சுதந்திரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் உணர்வைக் குறிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்தியர்கள் தங்கள் புகைப்படங்களை 'ஹர் கர் திரங்கா' இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
PMKSY : பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா.. வேலைவாய்ப்பு அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்
"திரங்கா, சுதந்திரம் மற்றும் தேசிய ஒற்றுமையின் உணர்வை அடையாளப்படுத்துகிறது. ஒவ்வொரு இந்தியனும் மூவர்ணக் கொடியுடன் உணர்வுபூர்வமான தொடர்பைக் கொண்டுள்ளனர், மேலும் தேசிய முன்னேற்றத்திற்கு கடினமாக உழைக்க இது நம்மைத் உங்களை தூண்டுகிறது. ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நடைபெறும் இந்த Har Ghar Tiranga இயக்கத்தில் நீங்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 13 முதல் 15 வரை பொது மக்கள் தங்கள் வீடுகளில் கொடி ஏற்றுமாறு இந்த இணையதளம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும், இதுவரை இந்த இணையத்தில் சரியாக 6,14,54,052 செல்ஃபி புகைப்படங்கள் குவிந்துள்ளதாகத் அந்த இணையம் தெரிவித்துள்ளது.
இந்திய தேசிய கொடியுடன் செல்ஃபிகளைப் பகிரும் வாய்ப்பை வழங்கும் இந்த இணையதளம், "கொடியுடன் செல்ஃபியைப் பதிவேற்றுவதன் மூலம் டிஜிட்டல் திரங்கா கலையின் ஒரு பகுதியாக நீங்கள் இருக்கலாம் என்று மக்களை ஊக்குவிக்கிறது.