இந்தியாவில் இதுவரை எவ்வளவு பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தெரியுமா?... அசத்தல் தகவல்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 07, 2021, 07:47 PM IST
இந்தியாவில் இதுவரை எவ்வளவு பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தெரியுமா?... அசத்தல் தகவல்...!

சுருக்கம்

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 36 கோடியைக் கடந்ததுள்ளது. 

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 36 கோடியைக் கடந்ததுள்ளது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 47,07,778 முகாம்களில் 36,13,23,548 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 36,05,998 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,733 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து 10-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,59,920 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.50 சதவீதமாகும்.  சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 4,437 சரிந்துள்ளது.தொடர்ந்து 55-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 47,240 பேர் குணமடைந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவர்களை விடக் கூடுதலாக 3,507 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 2,97,99,534 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.18 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19,07,216 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 42,33,32,097 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.39 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.29 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 16 நாட்களாக இந்த எண்ணிக்கை 3 சதவீதத்திற்கு குறைவாகவும், ஒரு மாத காலத்திற்கும் மேலாக 5 சதவீதத்திற்கு குறைவாகவும் உள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!
தேர்வு மையமாக மாறிய விமான ஓடுதளம்! 187 காலி இடங்களுக்கு 8000 பேர் போட்டி! பட்டதாரிகளின் பரிதாப நிலை!