அக்டோபர் மாதத்தில் உச்சம் தொடும் ஆபத்து... கொரோனா 3வது அலை பற்றி விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 5, 2021, 11:05 AM IST
Highlights

இந்தியாவில் கொரோனா 3வது அலையின் உச்சம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இருக்கலாம் என மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானி குழுவைச் சேர்ந்த மணிந்தரா அகர்வால் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா 3வது அலையின் உச்சம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இருக்கலாம் என மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானி குழுவைச் சேர்ந்த மணிந்தரா அகர்வால் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா 2வது அலையின் கோரதாண்டவன் தற்போது படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் மீண்டும் இயல்பு நிலையை நோக்கி நகர்ந்து வருகிறனர். இன்றைய நிலவரப்படி கொரோனா தொற்றால் இதுவரை 3 கோடியே 58 லட்சத்து 5 ஆயிரத்து 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 2 ஆயிரத்து 758 பேர் உயிரிழந்துள்ளனர், 2.97 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 

இதற்கிடையில் கொரோனா பாதிப்புகள் பற்றி முன்கூட்டியே கணிப்பதற்காக 3 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. இதில்  கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு குறித்து தற்போது கணிக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு மற்றும்  உருமாற்றம் அடைந்த வைரஸ், தடுப்பூசியின் செயல் திறன் ஆகியவை 3வது அலையின் முக்கிய காரணிகளாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

எனவே தடுப்பூசி போடும் பணிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மற்றொரு விஞ்ஞானியான வித்யாசாகர், 3வது அலையில் பாதிப்புகள் நிச்சயம் இருக்கும் என்றும், ஆனால் 2வது அலை அளவிற்கு உயிரிழப்புகள் இருக்காது என்றும் கணித்துள்ளார். 3வது அலையால் தினசரி பாதிப்புகள் 2 லட்சம் வரை இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. 

click me!