India Corona: ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா.. ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு..

Published : Apr 15, 2022, 12:18 PM IST
India Corona: ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா.. ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு..

சுருக்கம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 949 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளிலும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து பதிவானது. 

இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு தகவலின் படி, இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  மேலும் இன்று ஒரே நாளில் 810 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,07,038 ஆக உயர்ந்துள்ளது. எனவே நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதம் 98.76% ஆக உள்ளது.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிற்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனா தொற்றிற்கு பலியானவர்களில் மொத்த எண்ணிக்கை 5,21,743 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாட்டில் கொரோனாவிற்கு 11,191 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.03 விகிதமாக குறைந்துள்ளது. நாடுமுழுவதும் இதுவரை 186. 30 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?