இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,124 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,31,42,192 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க: இந்தியாவில் கொரோனாவுக்கு 45 லட்சம் பேர் பலி.. வெளியான ‘பகீர்’ தகவல் ! மத்திய அரசு அதிர்ச்சி
இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 1,927 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,26,02,714 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.75 சதவீதமாக உள்ளது.
தற்போது கொரோனா பாதிப்பினால் 14,971 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.03 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,24,507 ஆக உள்ளது. நாட்டில் உயிரிழந்தோர் விகிதம் 1.22 சதவீதமாக குறைந்துள்ளது.நாடு முழுவதும் இதுவரை 192.67 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,27,544 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: TN Corona: 4 மாவட்டங்களில் அதிகரித்தது கொரோனா… 50ஐ கடந்தது ஒருநாள் பாதிப்பு!!