அம்பேத்கர் பெயரை புதிய மாவட்டத்திற்கு சூட்ட எதிர்ப்பு...! அமைச்சர் வீட்டை தீ வைத்து எரித்த போராட்டக்காரர்கள்

By Ajmal KhanFirst Published May 25, 2022, 8:30 AM IST
Highlights

ஆந்திரபிரதேசத்தில் உள்ள கோனசீமா மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்ட மாநில அரசு முடிவெடுத்த நிலையில், சில வன்முறையாளர்கள் அமைச்சர் வீட்டிற்கு தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர்

ஆந்திரபிரதேச அரசு கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி கோதாவரியிலிருந்து புதிய கோணசீமா மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்திற்கு பி.ஆர்.அம்பேத்ர்கர் கோனசீமா மாவட்டம் என பெயர் மாற்றம் செய்வதற்கான அறிவிப்பை ஆந்திர அரசு கடந்த வாரம் வெளியிட்டது. இதற்கு அங்குள்ள ஒரு சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்து இருந்தன. கோனசீமா மாவட்டத்திற்கு பெயர் மாற்றம் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் ஹிமான்ஷூ சுக்கலாவின் மனு அளிக்க முயன்றனர். இதற்கு அனுமதி மறுத்ததையடுத்து போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.ஆந்திரபிரதேசம் அமலாபுரம் நகரில் போராட்டக்காரர்கள் போக்குவரத்து அமைச்சர் பி.விஸ்வரூப்பின் வீட்டை தீ வைத்து எரித்தனர். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.

அமைச்சர் வீட்டிற்கு தீ வைப்பு

இதனையடுத்து  காவல்துறை வாகனம் மற்றும் கல்வி நிறுவன பேருந்துகளுக்கும் சமூக விரோதிகள் தீ வைத்தனர்.  போராட்டக்கார்ர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசார் பலரும் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அமலாபுரத்தில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில்அந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த,சம்பவம்  தொடர்பாக கருத்து தெரிவித்த ஆந்திரபிரதேச உள்துறை அமைச்சர் தனேதி வனிதா, புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கரின் பெயரை சேர்ப்பதில் பெருமிதம் கொள்வதற்கு பதிலாக, சமூக விரோதிகள் வன்முறையை தூண்டிவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் 20க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்துள்ளதாக தெரிவித்த அவர்,இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என உறுதிபட கூறினார்.

click me!