பஞ்சாப் சுகாதார அமைச்சர் பதவி பறிப்பு.. உடனே கைது.! மாஸ் காட்டும் முதல்வர் பகவந்த் மான்.! பரபரப்பு சம்பவம்

Published : May 24, 2022, 02:22 PM ISTUpdated : May 24, 2022, 04:08 PM IST
பஞ்சாப் சுகாதார அமைச்சர் பதவி பறிப்பு.. உடனே கைது.! மாஸ் காட்டும் முதல்வர் பகவந்த் மான்.! பரபரப்பு சம்பவம்

சுருக்கம்

நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பெருபான்மை பலத்துடன் ஆம் ஆம்தி கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து, முதல்வராக பகவந்த் மான் தேர்வு செய்யப்பட்டார். முதலமைச்சராக பதவி ஏற்றதுமே, அமைச்சர்கள் பற்றி ஊழல் புகார் தெரிவிக்கலாம். ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பகவந்த் மான் தெரிவித்திருந்தார். 

ஊழல் குற்றச்சாட்டை அடுத்து பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லாவை பதவி நீக்கம் செய்து முதல்வர் பகவந்த் மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பெருபான்மை பலத்துடன் ஆம் ஆம்தி கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து, முதல்வராக பகவந்த் மான் தேர்வு செய்யப்பட்டார். முதலமைச்சராக பதவி ஏற்றதுமே, அமைச்சர்கள் பற்றி ஊழல் புகார் தெரிவிக்கலாம். ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பகவந்த் மான் தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பாக, வாட்ஸ் அப் எண்களையும் அறிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போதும் ஊழலற்ற ஆட்சியை கொண்டுவருவோம் என்பதை மையப்படுத்தியது.

இந்நிலையில், பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லா அரசு ஒப்பந்தங்களுக்கு ஒரு சதவீதம் கமிஷன் கேட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதையத்து, விஜய் சிங்லா அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாக பகவந்த் மான் அறிவித்துள்ளார். இந்த ஊழல் புகார் தொடர்பாக இவர் மீது விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உடனே ஊழல் தடுப்பு பிரிவு சிங்லாவை கைது செய்துள்ளது.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!