ஒரே ஸ்கூட்டரில் ஆறு பேர்... வைரலான வீடியோ... போலீஸ் என்ன சொன்னாங்க தெரியுமா?

Published : May 25, 2022, 08:55 AM IST
ஒரே ஸ்கூட்டரில் ஆறு பேர்... வைரலான வீடியோ... போலீஸ் என்ன சொன்னாங்க தெரியுமா?

சுருக்கம்

ஸ்கூட்டரில் இடம் இல்லாததை அடுத்து அதில் நபர் ஒருவர், மற்றொருவரின் தோள் மீது அமர்ந்து கொண்டு செல்கிறார்.   

இந்திய சாலைகளில் விசித்திர சம்பவங்கள் நடைபெறுவது இயல்பான காரியம் தான். அதுவும் நம் மக்கள் வாகனம் ஓட்டும் போது செய்யும் சில காரியங்கள் சிரிப்பை வரவைப்பதோடு, பதட்டத்தை ஏற்படுத்தும் அளவிற்கும் செல்வது உண்டு. அந்த வகையில் தான், ராமன்தீப் சிங் ஹோரா என்பவர் தனது ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 

வைரல் வீடியோவில் ஆறு பேர் ஒரே ஸ்கூட்டரில் செல்லும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இடம் பற்றாகுறை காரணமாக ஸ்கூட்டரில் நபர் ஒருவர், மற்றொருவரின் தோள் மீது அமர்ந்து கொண்டு செல்கிறார். வீடியோ ட்விட்டரில் பகிர்ந்ததோடு, மும்பை போலீஸ் ட்விட்டர் அக்கவுண்டையும் அதில் டேக் செய்து இருந்தார். இதை பார்த்த மும்பை போலீசார், வீடியோ வெளியிட்டவரின் தொடர்பு விவரங்களை கேட்டு உள்ளனர். 

மும்பை போலீஸ்:

இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினால் நிலைமையை மேலும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும் என மும்பை போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். இதோடு மேலும் நடவடிக்கை எடுக்க இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது என மும்பை போலீசார் கேட்டனர். அதற்கு  வீடியோவை வெளியிட்ட ராமன்தீப் சிங் ஹோரா, அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள ஸ்டார் பஜார் அருகில் நடைபெற்றது என பதில் அளித்தார்.

ஒரே ஸ்கூட்டரில் ஆறு பேர் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து, நெட்டிசன்கள் அதற்கு பல்வேறு வகையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பலர் வீடியோவில் பயணிக்கும் நபர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்த நிலையில், சிலர் இதற்கு சட்டம் என்ன நடவடிக்கை எடுக்குமோ என பதிவிட்டனர். அந்த வரிசையில் ஒருவர், ஒருவேளை இவர்களிடம் கார் இருந்தால், அதில் எத்தனை பேர் பயணம் செய்வார்களோ தெரியாது என பதிவிட்டு இருந்தார். 

இந்தியாவில் இருசக்கர வாகனம் ஓட்டுவோருடன் பின் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர்ந்து கொண்டு பயணம் செய்ய முடியும். ஆனால் இந்த வீடியோவின் படி, அந்த சட்டம் பின்பற்றப்படவில்லை என தெரிகிறது. 

PREV
click me!

Recommended Stories

இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!
இந்தியா-ரஷ்யா நட்பால் வயிற்றெரிச்சல்..! கதறப்போகும் தென்னிந்திய விவசாயிகள்..! டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு..!