சீன எல்லையில் மீண்டும் போர்  பதற்றம் !!   4 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு  நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகள் !!!

First Published Oct 7, 2017, 9:47 AM IST
Highlights
india china war... Indian soldiers in border


இந்திய - சீன எல்லைப்பகுதியில்  மீண்டும்  போர் பதற்றம்   நிலவி வரும் லையில்  4 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள சீன எல்லையில் இந்திய படைகள் உச்சக்கட்ட உஷார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய– சீன எல்லை பதற்றம் நிறைந்த பகுதியாக உள்ளது. அங்கு இந்தியா, சீனா, பூடான் ஆகிய 3 நாடுகளின் முச்சந்திப்பில் டோக்லாம் பகுதி உள்ளது. அங்கு சீன ராணுவம் சாலை போடும் பணியில் ஈடுபட்டதை இந்தியா தடுத்து நிறுத்தியது.

அப்போது இரு தரப்புக்கும் மோதல் போக்கு உருவானது. இதன் காரணமாக இந்திய, சீன துருப்புகள் அங்கு குவிக்கப்பட்டன. 73 நாட்கள் இந்த மோதல் போக்கு நீடித்தது. போர் பதற்றமும் காணப்பட்டது.

இந்திய வெளியுறவு அமைச்சகம், இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்துடன் தூதரக ரீதியில் மேற்கொண்ட பேச்சு வார்த்தையின் பலனாக ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆகஸ்டு 28–ந் தேதி, இந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்தது. பதற்றமும் நீங்கியது.

ஆனாலும் பதற்றம் நிலவிய டோக்லாம் முச்சந்திப்பு பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் சீன துருப்புகள் 500 பேர் தங்கி விட்டதாக தகவல்கள்  வெளியாகியுள்கூளதால்று மீண்கிடும்ன்ற பதற்னறம் ஏற்பட்டுள்ளது..

இதையடுத்து , 4 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள சீன எல்லையில், இந்திய படைகள் உச்சக்கட்ட செயல்பாட்டு உஷார் நிலையில் இருக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன், ஆயுதங்கள், தளவாடங்கள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கப்படும். பதற்றமான இடங்களில் கூடுதல் துருப்புகள் அமர்த்தப்படவும்   உத்தரவிடப்பட்டுள்ளது..

click me!