கியாஸ் ஸ்டவ், சப்பாத்தி, உள்பட 26 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு

First Published Oct 6, 2017, 10:01 PM IST
Highlights
Diesel engine cuts GSD for 26 items including spare parts stationary goods components of diesel engine Ayurvedic drugs and GSD. The council meeting was decided.


டீசல் எஞ்சின் உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி பொருட்கள், டீசன் எஞ்சின் உதிரிபாகங்கள், ஆயுர்வேத மருந்துகள் உள்ளிட்ட 26 வகையான பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.வரியை குறைத்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக தங்க நகைகள் வாங்குபவர்கள் பான்கார்டு எண் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது.

நாடுமுழுவதும் ஒரே சீரான வரியை கொண்டு வரும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் 5 , 12, 18, 28 ஆகிய 4 வீதங்களில் பொருட்களின் மீது வரி விதிக்கப்பட்டது. ஆனால், ஜி.எஸ்.டி. வரியில் பல்வேறு குளறுபடிகளும், சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களில் சிலவற்றுக்கு அதிக வரியும் விதிக்கப்பட்டது. இது மக்கள் மத்தியிலும், வர்த்தகர்கள் மத்தியிலும் ெபரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தினால் பொருட்கள் விலை குறையும் என்று மத்திய அரசு கூறியும், விலைகள் குறைந்தபாடில்லை. இதனால், நாடுமுழுவதும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அலை பரவியது. மேலும், ஏற்றுமதியாளர்கள், தங்க நகை தயாரிப்பாளர்கள், சிறு, குறு வர்த்தகர்களும் ஜி.எஸ்.டி. வரி உயர்வு குறித்து கவலை கொண்டனர்.

மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் கடந்த 2-ம் காலாண்டில் 5.7 சதவீதமாகக் குறைந்ததால், அதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க  மத்திய அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் 22-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன் விவரம் வருமாறு-

1. ரூ. 50 ஆயிரத்துக்கும் அதிகமாக மக்கள் தங்க நகைகள் வாங்கினால் தங்களின் பான்கார்டுஎண்ணை கடைக்காரரிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் நகை வாங்கியவர்கள் குறித்த விவரத்தையும் வருமான வரித் துறைக்குநகைக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

2. ஸ்டேனஷனரி பொருட்கள்,  டீசல் எஞ்சின் பொருட்கள் ஆகியவை மீதான ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

3. அன்-பிராண்டட் ஆயுர்வேத மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

4. காரா, பதப்படுத்தப்பட்ட மாம்பழம், மாங்காய், பதப்படுத்தப்பட்ட கோதுமை சப்பாத்தி உள்ளிட்ட 26 வகையான பொருட்கள் மீதான 12 சதவீத ஜி.எஸ்.டி வரி 5 சதவீதமாகக் குறைப்பு

5. கைத்தறி நெசவு பட்டுகளுக்கான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 ஆகக் குறைக்கப்பட்டது.

6. ஆண்டுக்கு ஒரு கோடி வரை விற்று முதல் இருக்கும் ஏ.சி. ரெஸ்டாரண்ட்கள் மீது  18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை மறுபரிசீலனை செய்ய முடிவு.

7. சிறு, குறுநிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ. ஒரு கோடி வரை விற்றுமுதல் இருந்தால், அவை 3 மாதங்களுக்கு ஒருமுறை ஜி.எஸ்.டி. ரிட்டன் தாக்கல் செய்தால் போதுமானது.

8. ரூ.75 லட்சம் வரை விற்றுமுதல்  இருக்கும் நிறுவனங்கள் காம்பன்ஷேசன் திட்டத்தில் இருக்கின்றன. இனி விற்றுமுதல் அளவு ரூ. ஒரு கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

9. ஆண்டுக்கு ரூ. ஒரு கோடி வரை விற்று முதல் இருக்கும் வர்த்தகர்கள் அரசுக்கு ஒரு சதவீதம் ஜி.எஸ்.டி வரியும், ரெஸ்டாரன்ட்கள் 5 சதவீதம் வரியும், உற்பத்தியாளர்கள் 2 சதவீதமும் வரி செலுத்தலாம்.

10 கியாஸ் அடுப்பு உள்ளிட்ட நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்கள் மீதான 28 சதவீத வரி குறைப்பு.

click me!